ADDED : ஆக 09, 2026 12:04 AM
அ நிறம் | அளவு
ஹாசன்: ஹாசன் மாவட்டம், பேலுார் தாலுகாவின், கித்தாவரா கிராமத்தின் காபி எஸ்டேட்டில், ஒற்றை காட்டு யானை முகாமிட்டுள்ளது. பகல் நேரத்தில் காபி தோட்டங்களில் நடமாடுகிறது; ஓய்வு எடுக்கிறது. இரவு நேரத்தில் சாலைக்கு வருகிறது. ரவுடியை போன்று பாதசாரிகள், வாகன பயணியரை வழிமறித்து தாக்குகிறது.
சில நாட்களுக்கு முன், பயணியர் சென்ற காரை, தன் தந்தத்தால் குத்தி நொறுக்கியது. ஜூலை 29ம் தேதியன்று தர்மராஜு என்பவரை தாக்கி கொன்றதும், இதே யானையாக இருக்கலாம் என, வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். யானைக்கு ரேடியோ காலர் இல்லாததால். அது எங்கு நடமாடுகிறது என, கண்டுபிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறுகின்றனர்.
