தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 619 பயணியருடன் மங்களூரு வந்த சொகுசு கப்பலுக்கு உற்சாக வரவேற்பு

 619 பயணியருடன் மங்களூரு வந்த சொகுசு கப்பலுக்கு உற்சாக வரவேற்பு

 619 பயணியருடன் மங்களூரு வந்த சொகுசு கப்பலுக்கு உற்சாக வரவேற்பு


ADDED : மார் 10, 2026 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 05:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மங்களூரு: கொச்சியில் இருந்து, 619 பயணியர், 390 பணியாளர்களுடன் மங்களூரு வந்த சொகுசு கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவின் மங்களூரு துறைமுகத்திற்கு, கொச்சியில் இருந்து எம்.எஸ்.சிரேனா என்ற பெயருடை ய சொகுசு கப்பல் நேற்று முன்தினம் வந்தது. இந்த கப்பலில் உள்நாட்டு, வெளிநாட்டு பயணியர் என, 619 பேர் மற்றும் பணியாளர்கள், 390 பேர் இருந்தனர்.

துறைமுகத்தை அடைந்ததும் கப்பலுக்கு, மங்களூரு துறைமுக நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கப்பலில் பயணித்த சுற்றுலா பயணியர் தரையில் இறங்கியதும் இந்திய பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டனர். கோகர்ணநாதேஸ்வரா கோவில், புனித அலோசியஸ் தேவாலயம், ஆயிரம் துாண் ஜெயின பசாதி உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்களில் அழைத்து செல்லப்பட்டனர்.

இந்திய கலாசாரம், ஆன்மிக பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் கலாசார நிகழ்ச்சிகளும் நடந்தன. பின், ஆயுஷ் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தியான மண்டபத்தில் ஓய்வு எடுத்த பின், கப்பலில் சுற்றுலா பயணியர் ஏறினர். அங்கிருந்து புறப் பட்ட கப்பல் கோவா நோக்கிச் சென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us