sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

விஜயநகர கட்டட கலையில் பிரமாண்ட விஷ்ணு கோவில்

/

விஜயநகர கட்டட கலையில் பிரமாண்ட விஷ்ணு கோவில்

விஜயநகர கட்டட கலையில் பிரமாண்ட விஷ்ணு கோவில்

விஜயநகர கட்டட கலையில் பிரமாண்ட விஷ்ணு கோவில்


ADDED : ஜூன் 23, 2025 11:10 PM

Google News

ADDED : ஜூன் 23, 2025 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துமகூரு மாவட்டம், துருவகெரேவின் மையப்பகுதியில் அமைந்து உள்ளது ஸ்ரீ பெட்டரசுவாமி கோவில். இந்த கோவிலுக்கு பல புராதன வரலாறுகள் உள்ளன.

முன்னொரு காலத்தில் தியானத்தில் ஈடுபட்டிருந்த முனிவர்கள், கிராம மக்களை அரக்கர்கள் தொந்தரவு செய்து உள்ளனர். இதனால், முனிவர்கள், பகவான் மஹாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். அப்போது, அங்கு தோன்றிய மஹாவிஷ்ணு அரக்கர்களை துவம்சம் செய்து உள்ளார்.

விஜயநகர பேரரசு


அந்த இடத்தில் விஷ்ணுவிற்கு கோவில் கட்டப்பட்டதாகவும், அந்த கோவிலின் கடவுள் ஸ்ரீ பெட்டரசுவாமி என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 15 ம் நுாற்றாண்டில், விஜயநகர பேரரசின் மஹானந்த நாயக்க சோமண்ணா என்பவரால் கட்டப்பட்டது. கோவில் 500 ஆண்டுகள் பழமையானது என வரலாறு கூறுகிறது.

கோவிலில் உள்ள மண்டபங்கள், துாண்கள் விஜயநகர பேரரசின் கட்டட கலையை பறைசாற்றுகிறது. இக்கோவில், ஹொய்சாளர், விஜயநகர பேரரசு, நால்வாடி கிருஷ்ணராஜ உடையார் என பலரது ஆட்சியின் கீழ் நிர்வகிக்கப்பட்டு உள்ளது.

கோவிலின் மூலவராக ஸ்ரீ பெட்டரசுவாமி உள்ளார். லட்சுமி தேவியும் உடனுள்ளார். மஹாலட்சுமி, ராமானுஜர் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதியும் உள்ளது. நவரங்கா மண்டபத்தில் 16 துாண்கள் உள்ளன.

வேண்டிய வரம்


இங்கு கோகுலாஷ்டமி, பிரம்மோத்சவம், வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருமணம், குழந்தை வரம், நோயிலிருந்து விடுபட, பக்தர்கள் இறைவனை வேண்டுகின்றனர். இங்கு வருவோர் மன நிம்மதி பெறுவர் என்பதுடன், தீய எண்ணங்களில் இருந்து விடுபடுவர் என நம்பப்படுகிறது.

குழந்தை வரம், திருமணம் நடக்க கோரி வேண்டுதல் வைப்போரின எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒரு ஆண்டுக்குள் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறி உள்ளதாக பலரும் கூறுகின்றனர்.

இக்கோவில் காலை 6:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை; மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us