/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விவசாயி வீட்டில் திருடியவருக்கு தர்ம அடி
/
விவசாயி வீட்டில் திருடியவருக்கு தர்ம அடி
ADDED : பிப் 16, 2026 06:19 AM
ஷிவமொக்கா: விவசாயியின் வீட்டில் திருடிவிட்டு, தப்பியோட முயற்சித்தவர் போலீசாரிடம் சிக்கினார்.
ஷிவமொக்கா மாவட்டம், சாகரா தாலுகாவின், கானல்ரே கிராமத்தில் வசிக்கும் விவசாயி குடும்பத்தினர், வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தனர்.
நேற்று முன்தினம் காலை, பூட்டிய வீட்டை நோட்டம் விட்ட நபர், ஜன்னல் கதவை உடைத்து உள்ளே புகுந்தார்.
பீரோவில் இருந்த 50,000 ரூபாய் மற்றும் தங்க நகைகளை திருடிக்கொண்டு தப்பியோடும் போது, கிராமத்தினரிடம் சிக்கினார். அவரை பிடித்து அடித்து துவைத்து, வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து சென்று, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இவரது பெயர் முத்தப்பா, 35, என்பதும், மங்களூரை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரிந்தது.

