/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வயலில் கடலைக்காய் திருடியவருக்கு தர்ம அடி
/
வயலில் கடலைக்காய் திருடியவருக்கு தர்ம அடி
ADDED : ஜன 11, 2026 05:46 AM
கதக்: வயலில் கடலைக்காய் திருடியவரை, கிராமத்தினர் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து உதைத்தனர்.
கதக் நகரின் ஹொம்பளா சாலையின், சர்வக்ஞா சதுக்கம் அருகே, நேற்று அதிகாலையில் சிலர் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போ து வாலிபர் ஒருவர், அ ங்குள்ள வயலில் விளைந்திருந்த கடலைக்காய்களை திருடிக் கொண்டிருந்தார். அதைக்கண்ட சிலர், அந்த வாலிபரை பிடித்து வைத்து, விவசாயிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அப்பகுதியில் நீண்ட நாட்களாக, கடலைக்காய் திருட்டு நடக்கிறது. இதனால், விவசாயிகள் கோபத்தில் இருந்தனர்.
இந்தச் சூழ்நிலையில், கடலைக்காய் திருடியவர் கையும், களவுமாக சிக்கியதால், அவரை விவசாயிகளும், பொதுமக்களும் கம்பத்தில் கட்டி வைத்து, கண் மூடித்த னமாக தாக்கினர். அவர் திருடிய கடலைக்காய் செடியை, மாலை போன்று, அவரது கழுத்தில் போட்டிருந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த கதக் ஊரக போலீசார், விவசாயிகளை சமாதானம் செய்து, அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

