/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தாய், தந்தை, அக்காவுக்கு கத்தி குத்து; மன நோயாளி நடத்திய வெறியாட்டம்
/
தாய், தந்தை, அக்காவுக்கு கத்தி குத்து; மன நோயாளி நடத்திய வெறியாட்டம்
தாய், தந்தை, அக்காவுக்கு கத்தி குத்து; மன நோயாளி நடத்திய வெறியாட்டம்
தாய், தந்தை, அக்காவுக்கு கத்தி குத்து; மன நோயாளி நடத்திய வெறியாட்டம்
ADDED : ஏப் 17, 2025 01:19 AM
சோழதேவனஹள்ளி : உறக்கத்தில் இருந்த தந்தை, தாய் மற்றும் அக்காவை மன நோயாளி இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெங்களூரின், விநாயகா லே - அவுட்டில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி, 51. இவரது மனைவி பார்வதம்மா, 48. இவருக்கு நயனா, 24, என்ற மகளும், ஹர்ஷா, 22, என்ற மகனும் உள்ளனர்.
இன்ஜினியரிங் முடித்த நயனா, வேலை தேடுகிறார். ஹர்ஷாவும் இன்ஜினியரிங் படிக்கிறார். சமீப நாட்களாக ஹர்ஷா, மன நோயால் அவதிப்பட்டார்.
இரண்டு நாட்களுக்கு முன், தாயிடம் சென்று, 'எதற்காகவோ எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது' என கூறியுள்ளார்.
தாயும் மருத்துவமனைக்கு வரும்படி அழைத்துள்ளார். ஆனால் ஹர்ஷா மருத்துவமனைக்கு வர மறுத்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3:00 மணியளவில் குடும்பத்தினர் உறக்கத்தில் இருந்தனர். அப்போது திடீரென விழித்து கொண்ட ஹர்ஷா, வீட்டு கதவை லாக் செய்து, சாவியை ஒளித்து வைத்தார்.
அதன்பின் சமையல் அறைக்கு சென்று கத்தியை எடுத்து வந்து, தந்தை கிருஷ்ணமூர்த்தியை குத்தினார். தடுக்க வந்த தாயையும் கத்தியால் தாக்கினார்.
சத்தம் கேட்டு விழித்து கொண்ட அக்கா நயனாவையும், வெறி பிடித்தவர் போன்று கத்தியால் குத்தினார். இதில் மூவரும் காயமடைந்தனர். கதவை திறந்து தப்பவும் முடியவில்லை.
சாவி கிடைக்கவில்லை. ஹர்ஷாவை மூவராலும் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அங்கும், இங்கும் ஓடினர்.
வேறு வழியின்றி சமையல் அறையில் இருந்து, மிளகாய் துாளை எடுத்து வந்து, அவரது முகத்தில் வீசினர். ஆனால், அப்போதும் ஹர்ஷா, தன் தாய், தந்தையை, அக்காவை விரட்டி, விரட்டி உடலின் பல இடங்களில் கத்தியால் கிழித்ததில் வீடு முழுதும் ரத்தம் சிதறியது.
இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கூறினர். உடனடியாக அங்கு வந்த சோழதேவன ஹள்ளி போலீசார், கதவை உடைத்து மூவரையும் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
வீடு முழுதும் ரத்த வெள்ளமாக இருப்பதை கண்டு, அக்கம், பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ஹர்ஷா மனநல மையத்தில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெறுகிறார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வர, சிறிது தாமதம் ஆகி இருந்தாலும், ஹர்ஷா தன் பெற்றோரை, அக்காவை கொலை செய்திருப்பார். போலீசார் வந்ததால் உயிர் தப்பினர் என, அக்கம், பக்கத்தினர் கூறினர்.