/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பி.ஜி.,க்குள் புகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மர்மநபர்

ADDED : செப் 01, 2025 03:52 AM
சுத்தகுன்டேபாளையா:பி.ஜி.,க்குள் புகுந்து இளம்பெண்ணுக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததுடன், 2,500 ரூபாயை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை, போலீஸ் தேடுகிறது.
பெங்களூரு சுத்தகுன்டேபாளையாவில் பெண்களுக்கான பி.ஜி., எனும் தங்கும் விடுதி உள்ளது. இங்கு 25 வயது இளம்பெண் தங்கி உள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணிக்கு, இளம்பெண் தங்கி இருந்த அறையின் கதவு திறந்தது. அரை துாக்கத்தில் இருந்த இளம்பெண், தனது ரூம் மேட் யாராவது வருவர் என நினைத்து துாங்கினார்.
சிறிது நேரம் கழித்து தன் கால்களை அசைக்க முடியாமல் இருப்பதை உணர்ந்து என்னவென்று பார்த்தார். அறையில் முகமூடி அணிந்த நபர் நிற்பதை பார்த்தார். அவர் கூச்சலிட்டார். இதை பொருட்படுத்தாத அந்நபர் பாலியல் தொல்லை கொடுத்தார்.
இந்த வேளையில் அறையில் இருந்த 2,500 ரூபாயை கொள்ளையடித்துவிட்டு அந்நபர் தப்பி சென்றார். சிறிது நேரம் கழித்து அறைக்கு வந்த மற்ற பெண்கள், இளம்பெண்ணின் கை, கால்களில் கட்டப்பட்ட கயிறை அவிழ்த்து விட்டார். சுத்தககுன்டேபாளையா போலீசில் இளம்பெண் நேற்று புகார் செய்தார். போலீசார், மர்மநபரை தேடுகின்றனர்.