/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரிசி லாரி மோதியதில் நடை மேம்பாலம் இடிந்தது
/
அரிசி லாரி மோதியதில் நடை மேம்பாலம் இடிந்தது
ADDED : செப் 29, 2025 05:33 AM

கோலார் : அரிசி லாரி மோதியதில், ந டை மேம்பாலம் இடிந்து டிரக் மீது விழுந்தது.
கோலார் புறநகரின் கொன்டராஜனஹள்ளி கிராமத்தில், பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அரிசி மூட்டைகளுடன் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, அங்கிருந்த நடை மேம்பாலம் மீது மோதியது. மோதிய வேகத்தில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்தது.
இந்த வழியாக சென்ற, ஜார்க்கண்ட் மாநில பதிவு எண் கொண்ட டிரக் மீது, பாலம் விழுந்தது. இதில் இருந்தவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக எந்த அபாயமும் ஏற்படவில்லை. சம்பவத்தை நேரில் பார்த்து கோபமடைந்த அப்பகுதியினர், லாரி ஓட்டுநரை தாக்க முற்பட்டனர்.
இச்சம்பவத்தால் தமிழகம், ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு சென்ற வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த போலீசார், தீயணைப்பு படையினர் இரண்டு பெரிய கிரேன்களின் உதவியால் இரண்டு மணி நேரம் போராடி, பாலத்தை அகற்றி, போக்குவரத்தை சரி செய்தனர்.