தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சாப்பிட வரும் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும் ரோபோ

 சாப்பிட வரும் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும் ரோபோ

 சாப்பிட வரும் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும் ரோபோ


ADDED : ஏப் 19, 2026 03:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 03:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுவாக ஹோட்டல்களில், ஆண்களோ அல்லது பெண்களோ சர்வர்களாக இருப்பது வழக்கம். ஆனால், மங்களூரு ஹோட்டல் ஒன்றில் பணியாற்றும் சர்வர், சாப்பிட வரும் வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்துகிறார்.

நாட்டில் தொழில் நுட்பமானது நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இந்த காலகட்டத்தில், ஹோட்டல் தொழிலிலும், புதிய தொழில்நுட்பங்கள் புகுந்துள்ளன. இதற்கு ஒரு உதாரணம், தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரில் உள்ள, 'ஹோட்டல் பாக ஷாலா.' இங்கு ரோபோ சர்வரை அறிமுகம் செய்துள்ளனர்.

கடந்த ஒரு மாதமாக, ஹோட்டல் ஊழியர்களுக்கு உதவி செய்வதுடன், அங்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு, உணவு, சிற்றுண்டி சப்ளையும் செய்கிறது. இது அவர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கிறது. ஹோட்டலில், 35 மேஜைகள் உள்ளன. இந்த மேஜைகளில் அமரும் வாடிக்கையாளர்களுக்கு, உணவு, குளிர் பானங்களை சப்ளை செய்கிறது ரோபோ.

உணவு, குளிர்பானங்களை ரோபோவில் உள்ள ரேக்கில் வைத்து, நிர்ணயித்த மேஜையின் எண்ணை அழுத்தினால், ரோபோ தானாகவே இயங்கி அந்த மேஜைக்கு சென்று சப்ளை செய்கிறது. ஊழியர்களின் பணிச்சுமையை குறைத்துள்ளது. மனித சக்தியை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

ஹோட்டலுக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் வரும் போது, ஊழியர்கள் திணறுவர். இத்தகைய நேரத்தில் அவர்களுக்கு ரோபோ பெரிதும் உதவியாக உள்ளது. அந்தந்த மேஜைகளுக்கு விரைந்து சென்று உணவு சப்ளை செய்கிறது. வாடிக்கையாளர்கள் பலரும், ரோபோவுடன் ஆர்வத்துடன் போட்டோ எடுத்து கொள்கின்றனர்.

ஹோட்டல் மானேஜர் பிரவீண் ஷெட்டி கூறியதாவது:

எங்கள் ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு, புதிய அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, ரோபோ பயன்படுத்தப்படுகிறது. இது, ஊழியர்களின் பணிச்சுமையை பாதியாக குறைத்துள்ளது. ஹோட்டலின், 35 மேஜைகளுக்கும் சென்று உணவு, சிற்றுண்டி, குளிர் பானம், ஐஸ்கிரீம் உட்பட, வாடிக்கையாளர்களுக்கு தேவையானதை சப்ளை செய்கிறது.

மங்களூரில் உள்ள ஹோட்டல்களில், இத்தகைய புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது இதுவே முதன் முறையாகும். அதிகமான வாடிக்கையாளர்கள் வந்தாலும், நெருக்கடியை சமாளிக்கிறது. வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர். இங்கு சாப்பிட வருவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. ரோபோ செயல்பாட்டை ஆர்வத்துடன் ரசிக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us