/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா மெட்ரோவுக்கு அமோக வரவேற்பு
/
ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா மெட்ரோவுக்கு அமோக வரவேற்பு
ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா மெட்ரோவுக்கு அமோக வரவேற்பு
ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா மெட்ரோவுக்கு அமோக வரவேற்பு
ADDED : ஆக 12, 2025 06:00 AM

பெங்களூரு : ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா மெட்ரோ ரயிலுக்கு பயணியரிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சேவை துவங்கிய முதல் நாளே கூட்டம் அலைமோதியது.
பெங்களூரு ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையில் 18.82 கி.மீ., துாரத்திற்கு, டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். நேற்று முதல் அதிகாரப்பூர்வ ரயில் சேவை துவங்கியது. இரு முனையங்களில் இருந்தும் காலை 6:30 மணி முதல் ரயில் இயக்கப்பட்டது.
இந்த வழித்தடத்தில் வரும் அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணியர் கூட்டம் அதிகமாக இருந்தது. ரயிலுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. ரயிலில் சென்றவர்கள் உற்சாகமாக 'செல்பி' எடுத்துக் கொண்டனர். மொபைல் போனில் வீடியோ எடுத்தபடி பயணம் மேற்கொண்டனர். நிற்க கூட இடம் இல்லாத அளவுக்கு ரயிலுக்குள் கூட்டம் இருந்தது.
தற்போது 25 நிமிடங்களுக்கு ஒரு முறை மட்டுமே, ரயில் இயக்கப்படுவதால் ரயிலில் கூட்டம் அதிகமாக உள்ளது. பயணியர் நலனை கருத்தில் கொண்டு, விரைவில் கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என்றும், மெட்ரோ நிர்வாகத்துக்கு கோரிக்கை எழுந்துள்ளது.