/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
செம்மறியாடு விற்பனைக்கு மார்க்கெட்டில் தனி இடம்?
/
செம்மறியாடு விற்பனைக்கு மார்க்கெட்டில் தனி இடம்?
ADDED : பிப் 18, 2025 05:49 AM
பெங்களூரு: 'செம்மறியாடு, கோழிகளை விற்பனை செய்வதற்காக, ஏ.பி.எம்.சி., மார்க்கெட்டில் தனி இடம் அமைத்து கொடுக்க வேண்டும்' என்று அரசுக்கு, முன்னாள் துணைவேந்தர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
முதல்வர் சித்தராமையாவுக்கு, வேளாண் பல்கலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற துணைவேந்தர்கள் எழுதிய கடிதம்:
மாநிலத்தில் ஆறு வேளாண் பல்கலைக் கழகங்கள் உள்ளன. ஆராய்ச்சி, விரிவாக்க துறையில் காலியாக உள்ள 60 சதவீத பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு நடைமுறைகளை துவங்க வேண்டும்.
மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன், முக்கிய விவசாய பொருட்களுக்கு கூடுதல் ஆதரவு விலையை மாநில ரசு வழங்க வேண்டும். அதிகரித்து வரும் சிறு விவசாயிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மலிவு விலையில் விவசாய இயந்திரங்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
மாநிலத்தில் உள்ள விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு, ஐந்து ஆண்டு காலத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும். தொழில்நுட்ப வழிகாட்டுதலை வழங்கி ஊக்குவிக்க வேண்டும். செம்மறியாடு, கோழிகளை விற்பனை செய்ய, ஏ.பி.எம்.சி.,யில் தனி இடம் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். விவசாயம் தொடர்பான பல நடவடிக்கைகளில் கிராமப்புற இளைஞர் குழுவை சேர்த்து அவர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்றி அளித்து, ஆதரவு திட்டங்களை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

