தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மறதி நோயால் காணாமல் போன தந்தையை வீதி, வீதியாக தேடி அலையும் மகன்

 மறதி நோயால் காணாமல் போன தந்தையை வீதி, வீதியாக தேடி அலையும் மகன்

 மறதி நோயால் காணாமல் போன தந்தையை வீதி, வீதியாக தேடி அலையும் மகன்


ADDED : பிப் 14, 2026 04:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 04:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாண்டியா: மறதி நோயால் வீட்டை விட்டு காணாமல் போன தந்தையை கண்டுபிடிக்க, மாண்டியா நகரில் மகன் வீதி, வீதியாக தேடி அலைகிறார்.

ஹாசன் மாவட்டம், சக்லேஷ்புரா தாலுகாவை சேர்ந்தவர் விருபாக்ஷா, 72. இவர், கே.எஸ்.ஆர்.டி.சி.,யில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மறதி நோய்க்கு ஆளான இவர், ஜனவரி, 27ம் தேதி வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. கலக்கம் அடைந்த குடும்பத்தினர் பல இடங்களிலு ம் தேடினர்.

சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, விருபாக்ஷா, பேலுாரு, மைசூரு வழியாக மாண்டியாவுக்கு சென்றிருப்பது தெரிந்தது.

அவரை கண்டுபிடிக்க மகன் சந்தோஷ், பல முயற்சிகள் செய்தார். இதற்கிடையில், மாண்டியா நகரின் சாலை ஒன்றில் நடந்து சென்ற விருபாக்ஷா, சோர்வடைந்து தலை சுற்றி கீழே விழுந்தார்.

இவரை அப்பகுதியினர், மிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது முகவரி தெரியாததால், அவர் அணிந்திருந்த சட்டையில் இருந்த டெய்லர் கடை எண்ணுக்கு போன் செய்து, தகவல் கூறினர். டெய்லர் மூல மாக சந்தோஷுக்கு தகவல் கிடைத்தது. தன் தந்தை மாண்டியாவில் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்த அவர், மாண்டியாவுக்கு புறப்பட்டார்.

ஆனால், இவர் மாண்டியா சென்றடைவதற்குள், விருபாக்ஷா மிம்ஸ் மருத்துவமனையில் இருந்து காணாமல் போய்விட்டார். மனம் வருந்திய சந்தோஷ், தந்தையின் போட்டோவை கையில் வைத்துக் கொண்டு, மாண்டியா நகரில் வீதி, வீதியாக தேடி அலைகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us