/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கபடி போட்டியில் கேலரி சரிந்து பார்வையாளர் பரிதாப பலி
/
கபடி போட்டியில் கேலரி சரிந்து பார்வையாளர் பரிதாப பலி
கபடி போட்டியில் கேலரி சரிந்து பார்வையாளர் பரிதாப பலி
கபடி போட்டியில் கேலரி சரிந்து பார்வையாளர் பரிதாப பலி
ADDED : ஏப் 28, 2025 07:02 AM

மாண்டியா: கேலரி சரிந்து விழுந்ததில், கபடி போட்டி பார்க்க வந்தவர் உயிரிழந்தார். மேலும் 13 பேர் காயம் அடைந்தனர்.
மாண்டியா மேலுகோட் அருகே மல்லநாயக்கனகட்டே கிராமத்தில், 'ஸ்ரீபைரவா கோப்பை' என்ற பெயரில், நேற்று முன்தினம் இரவு கபடி போட்டி நடந்தது.
திறந்தவெளியில் நடந்த இந்த போட்டியை காண, மல்லநாயக்கனகட்டே, அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கூடினர். மக்கள் போட்டியை அமர்ந்து காண்பதற்கு வசதியாக கேலரி அமைக்கப்பட்டு இருந்தது. கேலரிக்குள் நிறைய பேர் அமர்ந்து போட்டியை பார்த்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக கேலரி சரிந்து விழுந்ததில், இரும்பு கம்பிகளுக்குள் சிக்கி ஒருவர் இறந்தார். 13 பேர் காயம் அடைந்தனர்.
அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இறந்தவர் உடலும் மீட்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் உயிரிழந்த நபர் மல்லநாயக்கனகட்டே கிராமத்தின் பாப்பனச்சாரி, 50 என்பது தெரிந்தது.
குறைந்த வலிமை கொண்ட, இரும்பு கம்பிகளை பயன்படுத்தி கேலரி அமைத்ததாலும், நிறைய மக்கள் அமர்ந்து இருந்தாலும், வலிமை தாங்காமல் கேலரி சாய்ந்தது தெரிந்து உள்ளது.
போட்டியை ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்கு பதிவாகி உள்ளது.

