/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஒரு வாரம் குளிர்; தொடரும் வானிலை மையம் அறிவிப்பு
/
ஒரு வாரம் குளிர்; தொடரும் வானிலை மையம் அறிவிப்பு
ஒரு வாரம் குளிர்; தொடரும் வானிலை மையம் அறிவிப்பு
ஒரு வாரம் குளிர்; தொடரும் வானிலை மையம் அறிவிப்பு
ADDED : ஜன 22, 2026 05:33 AM

பெங்களூரு: 'பெங்களூரில் குறைந்தபட்ச வெப்பநிலை, 10 டிகிரி செல்ஷியசுக்கும் குறைந்ததால், குளிர் அதிகரித்து உள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்கு மாநிலம் முழுதும் குளிர் அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில், கடல் மட்டத்தில் இருந்து 3.1 கி.மீ., மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. கடலோர மாவட்டத்தின் பல பகுதிகளில் வழக்கத்தை விட, 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் குறைந்திருந்தது.
கடந்த 20ம் தேதி குறைந்தபட்ச வெப்பநிலையாக சிக்கபல்லாபூரில் 8.2; துமகூரில் 8.4; பெலகாவியில் 9.5; பெங்களூரு நகரில் 9.7; ஹாசனில் 9.8 டிகிரி செல்ஷியஸ் பதிவாகியிருந்தது.
பெங்களூரில் இன்று முதல் 27ம் தேதி வரை குறைந்தபட்ச வெப்ப நிலையாக 15 முதல் 16 டிகிரி செல்ஷியசும், அதிகபட்சமாக 29 டிகிரி செல்ஷியசும் இருக்கும்.
வடக்கு மாவட்டங்களின் உட்புறத்தின் ஒன்றிரண்டு இடங்களில் வெப்ப நிலை குறைந்திருந்தது. தெற்கு மாவட்டங்களின் உட்புறத்தில் சில பகுதிகளில் காலையில் பனிமூட்டமாக இருக்கும்.
வரும் 27ம் தேதி வரை மாநிலத்தின் அனைத்து கடலோர மாவட்டங்கள், வடக்கு மற்றும் தெற்கு உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நீடிக்கும். மழைக்கு வாய்ப்பில்லை.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தது.
நேற்று பெங்களூரில் குறைந்தபட்சமாக 9 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது.
காலை 9:00 மணிக்கும் கூட, சூரியனை பார்க்க முடியாமல், பனி மூட்டமாக காணப்பட்டது.
நடைபயிற்சி மேற்கொள்வோர், தெருவோர வியாபாரிகள், வாகன ஓட்டிகள் குளிரில் நடுங்கினர்.

