தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'குடா' தலைவராக பி.சீனிவாசன் பதவியேற்பு

 'குடா' தலைவராக பி.சீனிவாசன் பதவியேற்பு

 'குடா' தலைவராக பி.சீனிவாசன் பதவியேற்பு


ADDED : ஜன 22, 2026 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 05:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கவயல்: தங்கவயல் நகர அபிவிருத்தி குழுமம் என்ற, கே.ஜி.எப்., டெவலப்மென்ட் அத்தாரிட்டியான,- 'குடா'வின் புதிய தலைவராக பி.சீனிவாசன் நேற்று பதவியேற்றார்.

தங்கவயல் குடாவின் தலைவராக இருந்தவர் பங்கார்பேட்டையின் கோபால் ரெட்டி. இவரது பதவிக்காலம் அக்டோபரில் முடிந்தது. அவருக்கு பின் தலைவர் பதவிக்கு பலர் முயற்சித்து வந்தனர். ஆனாலும், தொகுதி காங்., எம்.எல்.ஏ., ரூபகலா சிபாரிசில், காங்கிரஸ் செயல்வீரர் சீனிவாசன் தலைவராக, வெங்கட், அருண் குமார், காந்தம்மா ஆகியோர் உறுப்பினர்களாக நேற்று பதவி ஏற்றனர்.

இதற்கான விழா குடா அலுவலகத்தில் சிறப்பு பூஜையுடன் நடந்தது. முறையாக குடா தலைவராக பதிவேட்டில் சீனிவாசன் கையொப்பமிட்டார். அவருக்கு எம்.எல்.ஏ., ரூபகலா அட்சதை துாவி வாழ்த்து தெரிவித்தார். அவரை தொடர்ந்து முன்னாள் கவுன்சிலர்கள், காங்கிரஸ் பிரமுகர்கள் பலர், சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us