/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கிராம மக்கள் துரத்தியதால் தென்னை மரத்தில் ஏறிய வாலிபர்
/
கிராம மக்கள் துரத்தியதால் தென்னை மரத்தில் ஏறிய வாலிபர்
கிராம மக்கள் துரத்தியதால் தென்னை மரத்தில் ஏறிய வாலிபர்
கிராம மக்கள் துரத்தியதால் தென்னை மரத்தில் ஏறிய வாலிபர்
ADDED : அக் 28, 2025 11:47 PM

கதக்: திருடன் என சந்தேகப்பட்டு கிராம மக்கள் விரட்டியதால், தென்னை மரத்தின் மீது ஏறிய வாலிபர், அங்கு நான்கு மணி நேரம் அமர்ந்திருக்க நேரிட்ட விசித்திர சம்பவம் நடந்துள்ளது.
கதக் மாவட்டம், விவேக்நகர் பகுதியில் நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத வாலிபர் வீதிகளில் அலைந்து திரிந்தார். அவர் புதிய நபராக இருந்ததாலும், வினோதமாக நடந்து கொண்டதாலும் அப்பகுதியினர், திருடன் என, நினைத்து அவரை விரட்டினர்.
பீதி அடைந்த அந்நபர் 30 அடி உயரமுள்ள தென்னை மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டார். மரத்தின் மீது அமர்ந்தபடியே, 'நான் திருடன் இல்லை' என கூறினார். இருப்பினும், கிராம மக்கள் மரத்தின் கீழேயே நின்று கொண்டிருந்தனர். இவ்வாறு, அந்நபர் நான்கு மணி நேரமாக அமர்ந்து கொண்டிருந்தார்.
இதுகுறித்து கதக் ரூரல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினருடன் வந்த போலீசார், அந்நபரை கீழே இறங்கி வருமாறு கூறினர். அவர் கீழே இறங்கி வராததால், தீயணைப்பு துறை அதிகாரிகள் ஏணி போட்டு மரத்தில் ஏறி, அந்நபரை மீட்டு கீழே கொண்டு வந்தனர்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்நபர் பெலகாவியை சேர்ந்த பசவராஜ், 29, என தெரியவந்தது. அவர் கூலி வேலை செய்து வருவதாகவும்.
வேலைக்காக தன் நண்பரை தேடி விவேக்நகருக்கு அதிகாலையிலேயே வந்ததாகவும் கூறியுள்ளார். இது உண்மையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

