தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ திருமணத்துக்கு மறுத்த காதலி; புரோகிதர் வாலிபர் தற்கொலை

 திருமணத்துக்கு மறுத்த காதலி; புரோகிதர் வாலிபர் தற்கொலை

 திருமணத்துக்கு மறுத்த காதலி; புரோகிதர் வாலிபர் தற்கொலை


ADDED : ஜன 08, 2026 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2026 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்தரகன்னடா: புரோகிதர் தொழில் செய்ததால், காதலி திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. மனம் வருந்திய இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

உத்தரகன்னடா மாவட்டம், அங்கோலா தாலுகாவின், அஸ்லேகெத்தே கிராமத்தில் வசித்தவர் பவன் பட், 24. இவர் புரோகிதர் தொழில் செய்து, வாழ்க்கை நடத்துகிறார்.

இவரும், இதே கிராமத்தில் வசிக்கும், 22 வயது இளம்பெண்ணும் சில ஆண்டுகளாக காதலித்தனர். விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என, பவன் பட் விரும்பினார்.

ஆனால் இவர் புரோகிதர் தொழில் செய்வதை காரணம் காட்டி, திருமணம் செய்து கொள்ள, காதலி விரும்பவில்லை. பலமுறை கேட்டும் இளம்பெண் பிடிவாதமாக இருந்தார்.

இதனால் மனம் நொந்த பவன்பட், நேற்று காலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து அங்கு வந்த அங்கோலா போலீசார், உடலை மீட்டனர். இது குறித்து, விசாரணை நடத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us