/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
60 சாலைகளில் ஏ.ஐ., கேமரா பொருத்த முடிவு
/
60 சாலைகளில் ஏ.ஐ., கேமரா பொருத்த முடிவு
ADDED : ஜன 08, 2026 05:30 AM
பெங்களூரு: பெங்களூரை தவிர, கர்நாடகாவின் மற்ற மாவட்டங்களில் விபத்துகள் நடக்கும், போக்குவரத்து விதிகள் மீறப்படும் 60 சாலைகளில், ஏ.ஐ., அடிப்படையிலான கேமராக்கள் பொருத்த, போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அடையாளம் கண்டுள்ள கர்நாடகாவின், அபாயமான 60 சாலைகளில் ஏ.ஐ., அடிப்படையிலான கேமராக்கள் பொருத்தப்படும்.
தாவணகெரே, தார்வாட், கலபுரகி, பெலகாவி, சித்ரதுர்கா, ஹாவேரி, விஜயநகரா, பல்லாரி, விஜயபுரா, தட்சிண கன்னடா மாவட்டங்களின் சாலைகளில், 'ஸ்மார்ட் என்போர்ஸ்மென்ட் கேமராக்கள்' பொருத்தப்படும்.
இந்த கேமராக்கள், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறினால், அவர்களை வீடியோ மற்றும் போட்டோ பதிவு செய்து, மத்திய அலுவலகத்தின் கட்டுப்பாட்டுக்கு தகவல் அனுப்பும்.
'ஸ்மார்ட் என்போர்ஸ்மென்ட் கேமராக்கள்' பொருத்த, போக்குவரத்து துறை டெண்டர் அழைத்துள்ளது. டெண்டர் முடிவான ஆறு மாதங்களுக்குள் கேமராக்கள் பொருத்தும் பணி துவக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

