/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பணம் கேட்டு மிரட்டிய காதலி விஷம் தின்று வாலிபர் தற்கொலை
/
பணம் கேட்டு மிரட்டிய காதலி விஷம் தின்று வாலிபர் தற்கொலை
பணம் கேட்டு மிரட்டிய காதலி விஷம் தின்று வாலிபர் தற்கொலை
பணம் கேட்டு மிரட்டிய காதலி விஷம் தின்று வாலிபர் தற்கொலை
ADDED : ஜூன் 18, 2025 11:13 PM

தொட்டபல்லாபூர்: பணம் கேட்டு மிரட்டிய காதலியால், விஷம் சாப்பிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூர் டவுனில் வசித்தவர் மஞ்சுநாத், 26. நேற்று முன்தினம் மாலை ராஜ்கட்டா ஏரிக்கரையில், வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் மஞ்சுநாத்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். மஞ்சுநாத் பயன்படுத்திய மொபைல் போனில் கடைசியாக அவர் பேசிய வீடியோ இருந்தது.
அந்த வீடியோவில், 'நானும், 24 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்தோம்; உடல்ரீதியான தொடர்பிலும் இருந்தோம். அந்த இளம்பெண்ணுக்கு, வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது; அந்த நபருடனும் நெருக்கமாக இருந்தார். திடீரென என்னிடம் வந்து, 'நான் கர்ப்பமாக இருக்கிறேன்; அதற்கு நீ தான் காரணம்' என்றார்.
'அதனால் இளம்பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தேன். ஆனால், அவர் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. என் மீது கும்பலகோடு போலீஸ் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 28ம் தேதி பலாத்கார புகார் அளித்தார். புகாரை வாபஸ் பெற அவர் கேட்டதால் பணம் கொடுத்தேன்.
'ஆனால், தொடர்ந்து பணம் கேட்டு என்னை மிரட்டினார். இதனால், மனம் நொந்து தற்கொலை செய்கிறேன். என் சாவுக்கு நான் காதலித்த பெண்ணும், அவரது குடும்பத்தினரும் தான் காரணம். என் சாவுக்கு போலீசார் நீதி வழங்க வேண்டும்' என, மஞ்சுநாத் பேசி இருந்தார்.
மஞ்சுநாத், விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. மஞ்சுநாத் காதலித்த பெண்ணிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர்.