ADDED : மே 13, 2026 02:59 AM

பெங்களூரு: ஐ.பி.எல்., சூதாட்டத்தில் பணம் இழந்ததால், கிருஷ்ணகிரி வாலிபர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா சிங்கசதனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார், 28.
இவர், கடந்த நான்கு ஆண்டுகளாக பெங்களூரு ரூரல், நெலமங்களா தாலுகா அரிசினகுண்டே கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்து, கார் பழுது பார்க்கும் நிலையத்தில் வேலை செய்தார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக குடும்பத்தினருக்கு மொபைல் போனில் அனுப்பிய வீடியோவில், 'என் மரணத்திற்கு நானே பொறுப்பு; கடனாளியாக வாழ விரும்பவில்லை. என் நண்பன் எனக்கு உதவியாக இருந்தான்' என்று பேசி இருந்தார்.
நெலமங்களா டவுன் போலீசார் நடத்திய விசாரணையில், ஐ.பி.எல்., சூதாட்டத்தில் ஈடுபட்ட சிவகுமார் நிறைய பணத்தை இழந்ததும், கடனை திரும்ப செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.
