sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 'டாட்டூ' மோகத்தால் பார்வையிழந்த வாலிபர்

/

 'டாட்டூ' மோகத்தால் பார்வையிழந்த வாலிபர்

 'டாட்டூ' மோகத்தால் பார்வையிழந்த வாலிபர்

 'டாட்டூ' மோகத்தால் பார்வையிழந்த வாலிபர்


ADDED : பிப் 05, 2026 06:43 AM

Google News

ADDED : பிப் 05, 2026 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'டாட்டூ' மோகத்தால், பெங்களூரு வாலிபர், பார்வையை இழந்துள்ளார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்தவர் ஜெகதீஷ், 24. ஐ.டி.ஐ., மெக்கானிகல் இன்ஜினியரிங் முடித்துள்ளார். 'டாட்டூ' கலைஞராக உள்ளார். இதற்காக, நேபாளத்தில் டாட்டூ வரைவதற்கும், காது குத்துவதற்கும் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார்.

சிறு வயதில் இருந்தே ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. இதற்காக, தன் கண் கருவிழிகளில் டாட்டூ குத்த தீர்மானித்தார். இது தொடர்பாக நிபுணர்கள், டாக்டர்களிடம் விசாரித்தபோது, 'வேண்டாம்' என்றே அறிவுரை கூறியுள்ளனர். ஆனால், ஜெகதீஷ், தன் முடிவில் தீர்க்கமாக இருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன், கருவிழிகளில், டாட்டூ குத்த, 2 லட்சம் ரூபாய் செலவழித்தார். அவரது கருவிழிகளில் டாட்டூ வரைய, மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆனது. டாட்டூ செய்த பின், மூன்று நான்கு நாட்களாக கண்கள் எரிச்சலாக உள்ளதாகவும், வலிப்பதாகவும், கண்கள் சரிவர தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், 'ஜெகதீஷின் இரு கண் கரு விழிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. இனி அவரால் பார்க்க முடியாது' என்று கூறிவிட்டனர். இதனால், குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us