/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'டேட்டிங்' செயலியால் ரூ.6.8 லட்சம் இழந்த வாலிபர்
/
'டேட்டிங்' செயலியால் ரூ.6.8 லட்சம் இழந்த வாலிபர்
'டேட்டிங்' செயலியால் ரூ.6.8 லட்சம் இழந்த வாலிபர்
'டேட்டிங்' செயலியால் ரூ.6.8 லட்சம் இழந்த வாலிபர்
ADDED : நவ 12, 2025 09:57 PM
இந்திராநகர்: 'டேட்டிங்' செயலியில் அறிமுகமான இளைஞரை, லாட்ஜுக்கு அழைத்துச் சென்று, பணம், தங்க நகைகளை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்த பெண்ணை போலீசார் தேடுகின்றனர்.
தமிழகத்தை சேர்ந்தவர் அவினாஷ் குமார், 28. இவர், பெங்களூரின் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். பீன்யாவின், நாகசந்திராவில் 'பேயிங் கெஸ்ட்' மையத்தில் தங்கியுள்ளார்.
இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, 'டேட்டிங்' செயலியில் கவிப்ரியா, 24, என்ற பெண் அறிமுகமானார். இருவரும் மொபைல் எண்களை பகிர்ந்து கொண்டனர்.
தினமும் மொபைல் போனில் பேசி, 'சாட்டிங்' செய்து நெருக்கமாகினர். அவ்வப்போது நேரிலும் சந்தித்துக் கொண்டனர். சில நாட்களுக்கு முன்பு, இந்திரா நகரில் உள்ள ரெஸ்டாரென்ட் ஒன்றில், இருவரும் சந்தித்துக் கொண்டனர். மது அருந்தினர்.
அவினாஷ் குமார், குடிபோதையில் இருந்ததால், பி.ஜி.,க்கு செல்ல முடியவில்லை. எனவே கவிப்பிரியா, லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்தார். இருவரும் இரவு அங்கு தங்கினர். ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டனர்.
உணவு முடிந்த பின், அவினாஷ் குமாருக்கு, கவிப்பிரியா தண்ணீர் கொடுத்தார். அதை குடித்தவுடன் அவினாஷ் குமாருக்கு மயக்கம் ஏற்பட்டது.
காலையில் எழுந்தபோது, நகைகள், பணத்துடன் கவிப்பிரியா தப்பியது தெரிந்தது. இந்திரா தகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று அவினாஷ் குமார் புகார் அளித்தார்.
அவர் அணிந்திருந்த செயின், கை காப்பு உட்பட, 6.80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 10,000 ரூபாயை திருடிக்கொண்டு கவிப்பிரியா தப்பியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கவிப்பிரியாவின் மொபைல் லொகேஷனை வைத்து, அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.

