/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதலாளி கழுத்தில் கத்தியால் குத்தி செயினை பறித்து சென்ற வாலிபர்
/
முதலாளி கழுத்தில் கத்தியால் குத்தி செயினை பறித்து சென்ற வாலிபர்
முதலாளி கழுத்தில் கத்தியால் குத்தி செயினை பறித்து சென்ற வாலிபர்
முதலாளி கழுத்தில் கத்தியால் குத்தி செயினை பறித்து சென்ற வாலிபர்
ADDED : நவ 15, 2025 11:04 PM

கும்பலகோடு: முதலாளி கழுத்தில் கத்தியால் குத்தி, தங்க செயினை பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.
பெங்களூரு, கும்பலகோட்டை சேர்ந்தவர் அமர் நாராயணசாமி, 45. சுவாமி சிலை தயாரிக்கும் பட்டறை நடத்துகிறார். கடந்த 11ம் தேதி அமரின் பட்டறையில், ஜெயந்த், 23, என்பவர் வேலைக்கு சேர்ந்தார். மும்முரமாக வேலை செய்ததால் அவர் மீது அமருக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
நேற்று முன்தினம் காலையில் அமரிடம் பேச்சு கொடுத்த ஜெயந்த், 'கும்பலகோடு அருகே சுலிகெரே கிராமத்தில், பி.டி.ஏ.,வுக்கு சொந்தமான இரண்டு வீட்டுமனைகள் விற்பனைக்கு உள்ளது. எனக்கு தெரிந்தவர்களிடம் கூறி, உங்களுக்கு குறைந்த விலைக்கு வாங்கித் தருகிறேன்' என்றார்.
இதை நம்பிய அமர், ஜெயந்தை தன் காரில் சுலிகெரே கிராமத்திற்கு அழைத்துச் சென்றார். வீட்டுமனையை பார்த்து விட்டு பட்டறைக்கு திரும்பி வரும் வழியில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஜெயந்த், காரை ஓட்டிக் கொண்டிருந்த அமரின் தங்க செயினை இழுத்தார்.
அதிர்ச்சி அடைந்த அமர், காரை நிறுத்தி ஜெயந்தை தாக்க முயன்றார். கோபம் அடைந்த ஜெயந்த், அமரின் முதுகு, கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு, தங்க செயினை பறித்துவிட்டு தப்பினார். அந்த வழியாக வந்தவர்கள் அமரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அமர் அளித்த புகாரில் கும்பலகோடு போலீசார், ஜெயந்த்தை தேடி வருகின்றனர்.

