/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அதிக லாபம் ஆசை காட்டி பெண்ணிடம் ரூ.81 லட்சம் மோசடி
/
அதிக லாபம் ஆசை காட்டி பெண்ணிடம் ரூ.81 லட்சம் மோசடி
அதிக லாபம் ஆசை காட்டி பெண்ணிடம் ரூ.81 லட்சம் மோசடி
அதிக லாபம் ஆசை காட்டி பெண்ணிடம் ரூ.81 லட்சம் மோசடி
ADDED : நவ 15, 2025 11:04 PM
சஹகாரநகர்: ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை காண்பித்து, 81 லட்சம் ரூபாய் மோசடி செய்த டாக்டர், அவரது மனைவி மீது வழக்குப் பதிவாகிஉள்ளது.
பெங்களூரின் சஹகாரநகரில் வசிப்பவர் டாக்டர் பிரமோத். இவரது மனைவி ரம்யா. அம்ருதஹள்ளியில் வசிக்கும் ஸ்வேதா ஜெயின், 2024ல் பிரமோதிடம் சிகிச்சைக்காக வந்திருந்தார். அப்போது இவருக்கும், இவரது மனைவி ரம்யாவுக்கும் அறிமுகம் ஏற்பட்டு அடிக்கடி சந்தித்துக் கொண்டனர்.
ஸ்வேதா ஜெயின் தொழிலதிபர் என்பதை தெரிந்து கொண்ட பிரமோத், அவரது மனைவி ரம்யாவும் பணம் பறிக்க திட்டமிட்டனர். 'ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால், அதிகமான லாபம் கிடைக்கும். நாங்களும் முதலீடு செய்துள்ளோம்; அதிக லாபம் கிடைக்கிறது' என, ஆசை வார்த்தை கூறினர்.
இதை நம்பிய ஸ்வேதா ஜெயின், முதற்கட்டமாக 20 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். இரண்டாம் கட்டமாக ரம்யாவின் கணக்குக்கு 25 லட்சம் ரூபாய் அனுப்பினார்.
இது போன்று படிப்படியாக 81 லட்சம் ரூபாய் அனுப்பினார். '20 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்திருக்கிறது. அதை 2024 நவம்பர் வரை எடுக்காதீர்கள். இதனால் மேலும் லாபம் கிடைக்கும்' என, ரம்யா கூறினார்.
இதை நம்பி ஸ்வேதாவும் எடுக்கவில்லை. ஆனால் குறிப்பிட்ட தேதிக்கு பின்னும் லாபத்தை தரவில்லை. முதலீடு செய்திருந்த பணத்தையாவது திருப்பித் தரும்படி கேட்டும் ரம்யா பொருட்படுத்தவில்லை.
எனவே டாக்டர் தம்பதி மீது, நீதிமன்றத்தில் ஸ்வேதா ஜெயின் வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடத்திய நீதிமன்றம், பிரமோத், அவரது மனைவி ரம்யா மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தும்படி, அம்ருதஹள்ளி போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்படி போலீசாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

