ADDED : ஏப் 27, 2025 05:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பன்னர்கட்டா :  பெங்களூரு பன்னர்கட்டா அருகே கெஞ்சயனதொட்டி கிராமத்தில் வசித்தவர் சுரேஷ், 33. இவர், நேற்று முன்தினம் பாரில் மது அருந்தினர்.
அப்போது பக்கத்து மேஜையில் அமர்ந்து இருந்த மூன்று பேர், சத்தமாக பேசினர்.
அமைதியாக பேசும்படி சுரேஷ் கூறினார். இதனால் தகராறு ஏற்பட்டது. பார் ஊழியர்கள் சமாதானம் செய்து அனுப்பினர்.
நேற்று அதிகாலை 1:00 மணிக்கு சுரேஷ் வீட்டின் முன் அமர்ந்து இருந்தார். அப்போது பாரில் பிரச்னை செய்த மூன்று பேரும் வந்தனர். சுரேஷுடம் தகராறு செய்து அவரை தாக்கினர்.
சத்தம் கேட்டு அவரது மனைவி வெளியே வந்தார். இந்த நேரத்தில் சுரேஷை, மூன்று பேரும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பினர். படுகாயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பன்னர்கட்டா போலீசார் விசாரிக்கின்றனர்.

