தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காதலி வயிற்றில் கரு ;கலைத்த வாலிபர் கைது

 காதலி வயிற்றில் கரு ;கலைத்த வாலிபர் கைது

 காதலி வயிற்றில் கரு ;கலைத்த வாலிபர் கைது


ADDED : பிப் 05, 2026 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 06:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவனஹள்ளி: காதலியின் வயிற்றில் வளர்ந்த கருவை, மாத்திரை கொடுத்து கலைத்த வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூர் டவுன் சாந்தி நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார், 30. இரண்டு ஆண்டுக்கு முன் நந்திமலைக்கு சுற்றுலா சென்றார். அப்போது, அங்குள்ள ஹோட்டலில் மேலாளராக வேலை செய்த, 32 வயது பெண்ணை சந்தித்தார்.

அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. அந்த பெண், கணவரை பிரிந்து, மகளுடன் தனியாக வசிப்பது தெரிந்தும், பிரவீன்குமார் காதலித்தார். காதலியின் வீட்டில் ஓராண்டாக வசித்தார். திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, காதலியுடன் உல்லாசமாக இருந்தார். இதனால், பெண் கர்ப்பம் அடைந்தார்.

இதுபற்றி பிரவீன் குமாரிடம் கூறிய போது, ஜாதியை காரணம் காண்பித்து திருமணம் செய்ய மறுத்தார். இதனால் தொட்டபல்லாபூர் போலீஸ் நிலையத்தில், நான்கு மாதங்களுக்கு முன் பாதிக்கப்பட்ட பெண் புகார் செய்தார். பிரவீனிடம் விசாரித்த போது, அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறினார்.

இந்நிலையில், கடந்த மாதம் 25ம் தேதி பிரவீனும், அவரது காதலியும் லாட்ஜில் தங்கி இருந்தனர். அப்போது பிரவீன் கொடுத்த உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில், பெண்ணின் கரு கலைந்தது. கரு கலைப்பு மாத்திரையை உணவுடன் சேர்த்து கொடுத்தது தெரிந்தது. இதுபற்றி பெண் அளித்த புகாரில் பிரவீன் நேற்று கைது செய்யப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us