/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரவுடி சிவகுமார் கொலையான 10 நிமிடத்தில் சென்னைக்கு காரில் தப்பிய 'ஏ1' ஜெகதீஷ்
/
ரவுடி சிவகுமார் கொலையான 10 நிமிடத்தில் சென்னைக்கு காரில் தப்பிய 'ஏ1' ஜெகதீஷ்
ரவுடி சிவகுமார் கொலையான 10 நிமிடத்தில் சென்னைக்கு காரில் தப்பிய 'ஏ1' ஜெகதீஷ்
ரவுடி சிவகுமார் கொலையான 10 நிமிடத்தில் சென்னைக்கு காரில் தப்பிய 'ஏ1' ஜெகதீஷ்
ADDED : ஜூலை 26, 2025 05:00 AM

பெங்களூரு: ரவுடி சிவகுமார் கொலை செய்யப்பட்ட 10 நிமிடங்களில், வழக்கின் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெகதீஷ், வீட்டில் இருந்து காரில் சென்னைக்கு தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது.
பெங்களூரு பாரதிநகரை சேர்ந்த ரவுடி சிவகுமார், 44, கொலை வழக்கை பாரதிநகர் போலீசார் விசாரித்து வந்த நிலையில், சி.ஐ.டி.,க்கு மாற்றி, நேற்று முன்தினம் அரசு உத்தரவிட்டது. விரைவில் சி.ஐ.டி., விசாரணை துவங்க உள்ளது.
இந்நிலையில் சிவகுமார் கொலை வழக்கில், கோலாரின் மாலுாரை சேர்ந்த ரவுடி கிரண் என்ற டெட்லி கிரண், 23, என்பவர், நேற்று கைது செய்யப்பட்டார்.
மாலுார் சிக்கதிருப்பதியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து பதுங்கி இருந்த கிரணை, புலிகேசிநகர் ஏ.சி.பி., கீதா தலைமையிலான போலீசார் பிடித்தனர். இந்த வழக்கில் கைது எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் கைதான 16 பேரில் கிரண், மதன், விமல், பிரதீப், பேட்ரிக், சாமுவேல் உட்பட 9 பேர் பெயர்கள், பாரதிநகர் போலீஸ் நிலையத்தின் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
பாரில் ஸ்கெட்ச் வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெகதீஷ் துபாய்க்கு தப்பி சென்றுவிட்டார். 'ரெட் கார்னர்' நோட்டீஸ் பிறப்பித்து, அவரை கைது செய்யும் முயற்சியில் பெங்களூரு போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், கொலை நடந்த அன்று கிடைத்த, இரண்டு வீடியோக்கள் நேற்று வெளியாகி உள்ளன.
முதல் வீடியோவில் கொலை நடந்த, கடந்த 15ம் தேதி மாலை 4:00 மணிக்கு, ராமமூர்த்திநகரில் உள்ள பாரில் வைத்து ஜெகதீசும், கொலையாளிகளும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துக் கொண்டே, பேசிக் கொண்டிருக்கும் காட்சிகள் உள்ளன.
இரண்டாவது வீடியோவில் ஹென்னுாரில் உள்ள தனது வீட்டில் இருந்து, இரவு 8:15 மணிக்கு ஜெகதீஷ் காரில் தப்பிச் செல்லும் காட்சிகள் உள்ளன.
சிவகுமார் கொலை ஹலசூரு ஏரிக்கரை பகுதியில் இரவு 8:05 மணிக்கு நடந்தது. கொலை நடந்த 10 நிமிடங்களில், ஜெகதீஷ் தன் காரில் சென்னைக்கு தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது. இரவு 9:30 மணிக்கு ஜெகதீஷ் கார், அத்திப்பள்ளி சோதனை சாவடியை கடக்கும், வீடியோவும் வெளியாகி உள்ளது.
திணறிய எம்.எல்.ஏ., இந்த வழக்கில் 'ஏ5' குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள, கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ், இரண்டு முறை விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். முதல்முறை விசாரணைக்கு ஆஜரானபோது, 'ஜெகதீசுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. கொலை செய்யப்பட்ட சிவகுமார் யார் என்றே எனக்கு தெரியாது' என்று உறுதியாக கூறி உள்ளார்.
இரண்டாவது முறை ஆஜரானபோதும், விசாரணை அதிகாரி பிரகாஷ் ராத்தோட் முதலில் கேட்ட கேள்விகளுக்கு, 'என் மீது எந்த தவறும் இல்லை' என்று பதில் அளித்துள்ளார். பின், ஜெகதீஷுடன் அடிக்கடி மொபைல் போனில் பேசியது உட்பட, சில தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் கேள்வி எழுப்பியபோது, பதில் அளிக்க முடியாமல் திணறி இருக்கிறார்.
பெரும்பாலான கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
டைரி சிக்கியது இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, கிரண் என்பவர் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, பைரதி பசவராஜுன் வலதுகரம் என்று கூறப்படும், மலையாளி அஜித், ஜெகதீஷ் இடையில் பணபரிவர்த்தனை நடந்தது தொடர்பான, டைரி ஒன்று சிக்கி உள்ளது. இதன் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராக மலையாளி அஜித்துக்கு, போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
விசாரணை அதிகாரியை, மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசிய மலையாளி அஜித், 'நான் வக்கீலாக உள்ளேன். எனக்கும், ஜெகதீசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னை வழக்கில் சேர்க்க நினைத்தால், சட்டப்படி போராடுவேன்' என்று கூறி உள்ளார்.
இதையடுத்து மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' செய்துவிட்டு, மலையாளி அஜித்தும் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.