/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பத்ரகிரி சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 16ல் ஆடி கிருத்திகை
/
பத்ரகிரி சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 16ல் ஆடி கிருத்திகை
பத்ரகிரி சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 16ல் ஆடி கிருத்திகை
பத்ரகிரி சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 16ல் ஆடி கிருத்திகை
ADDED : ஆக 12, 2025 11:24 PM
ஷிவமொக்கா: ஷிவமொக்கா மாவட்டம், பத்ரகிரி சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 16ல் ஆடிக் கிருத்திகை காவடி திருவிழா நடக்கிறது.
ஷிவமொக்கா மாவட்டம், பத்ராவதி சிவசுப்பிரமணிய சுவாமி மடம் சார்பில், பத்ரகிரி சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை காவடி திருவிழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
வரும் 15ல் பரணி காவடித் திருவிழாவை ஒட்டி, அதிகாலையில் விஸ்வரூப தரிசனம், பூஜை, சாந்தி பூஜை, மதியம் உச்சிகால பூஜை, மாலையில் தீபாராதனை, இரவில் ராக்கால பூஜை; நள்ளிரவில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.
வரும் 16ம் தேதி ஆடி கிருத்திகை திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் விஸ்வரூப தரிசனம், பூஜை, விளா பூஜை, காலை சந்தி பூஜை, மதியம் உச்சிகால பூஜை, மாலையில் தீபாராதனை, இரவில் அர்த்தஜாம பூஜை நடக்கிறது.
மேலும் விபரங்களுக்கு 08282 - 267206 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.