தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ திடீரென காணாமல் போன மடாதிபதி சித்தகங்கா மடத்திலிருப்பது கண்டுபிடிப்பு

 திடீரென காணாமல் போன மடாதிபதி சித்தகங்கா மடத்திலிருப்பது கண்டுபிடிப்பு

 திடீரென காணாமல் போன மடாதிபதி சித்தகங்கா மடத்திலிருப்பது கண்டுபிடிப்பு


ADDED : மார் 05, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 06:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துமகூரு: இளைஞர்கள் சிலரின் ரகளையால், பெள்ளாவி காரத மடத்தில் இருந்து வெளியேறிய மடாதிபதி வீர பசவ சுவாமிகள், சித்தகங்கா மடத்தில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால், பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.

துமகூரு மாவட்டம் பெள்ளாவி கிராமத்தில் உள்ளது காரத மடம். இதன் மடாதிபதி வீர பசவ சுவாமிகள். இரண்டு நாட்களுக்கு முன், பெள்ளாவி கிராமத்தை சேர்ந்த வீரேஷ் என்ற இளைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்து, காரத மடத்தின் வளாகத்தில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அதை யாரோ கிழித்துள்ளனர்.

இதனால், கோபமடைந்த இளைஞர்கள் சிலர் மடத்திற்குள் புகுந்து, பிளக்ஸ் பேனரை கிழித்தது யார் என்பதை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமரா காட்சிகளை காட்டும்படி, வீர பசவ சுவாமிகளிடம் கேட்டு தகராறு செய்துள்ளனர்.

இந்த நிகழ்வால் மனம் நொந்த அவர், யாரும் இல்லாத நேரத்தில், இரவோடு இரவாக மடத்தை விட்டு வெளியேறினார். மொபைல் போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

அதன்பின், இரண்டு நாட்களாக அவர் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. மடத்தின் நிர்வாகிகள் பீதியடைந்தனர்.

மடாதிபதியை தேட துவங்கினர். எங்கும் தென் படாததால், பெள்ளாவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் தேடிய போது, துமகூரின் சித்தகங்கா மடத்தில் வீரபசவ சுவாமிகள் பாதுகாப்பாக இருப்பதை நேற்று கண்டுபிடித்தனர்.

மடத்திற்குள் நுழைந்து இளைஞர்கள் அட்டகாசம் செய்ததே, வீர பசவ சுவாமிகள் மடத்தை விட்டு வெளியேற காரணம்.

சம்பவம் நடந்த அன்று இரவு பாதயாத்திரையாக சித்தகங்கா மடத்துக்கு புறப்பட்ட அவர், நேற்று அதிகாலை, 4:30 மணியளவில் தான் மடத்தை அடைந்துள்ளார். அங்கு சிவகுமார சுவாமிகளின் சமாதியை தரிசனம் செய்தார். அதன்பின் சித்தலிங்க சுவாமிகளுடன் இணைந்து சிவபூஜை செய்தார்.

'விரைவில் காரத மடத்துக்கு திரும்புவேன். பக்தர்கள் பயப்பட வேண்டாம்' என்று கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us