/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாணவியருடன் கும்மாளம் ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு
/
மாணவியருடன் கும்மாளம் ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு
மாணவியருடன் கும்மாளம் ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு
மாணவியருடன் கும்மாளம் ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு
ADDED : டிச 23, 2025 06:49 AM

யாத்கிர்: கல்வி சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில், மாணவியருடன் நீச்சல் குளத்தில் ஆசிரியர்கள் ஆட்டம் போட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
யாத்கிர் மாவட்டம், சுரபுரா தாலுகாவின், கெம்பாவி கிராமத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 9ம் வகுப்பு 10ம் வகுப்பு படிக்கும், 93 மாணவியர் கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர். சுற்றுலா தலத்தில், 'வாட்டர் பார்க்' சென்றனர்.
அங்குள்ள நீச்சல் குளத்தில், மாணவியர் விளையாடினர். அவர்களுடன் தலைமை ஆசிரியர் உட்பட, நான்கு ஆசிரியர்கள் அரை நிர்வாணமாக நீரில் இறங்கி, மாணவியருடன் விளையாடினர். மாணவியருடன் சேர்ந்து நீரில் விளையாடியது, குளித்த வீடியோவை மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
இந்த வீடியோ பரவியுள்ளது. இதை கவனித்த மாணவியரின் பெற்றோர், ஆசிரியர்கள் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். தலைமை ஆசிரியர் உட்பட, நான்கு ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்யும்படி, கல்வித்துறையிடம் வலியுறுத்தி உள்ளனர்.
'கல்வி சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில், மாணவியருடன் இதுபோன்று அநாகரிகமாக நடந்து கொண்டது சரியல்ல' என, பலரும் கண்டித்துள்ளனர்.

