/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வாலிபரை கொல்ல முயன்ற கள்ளக்காதலி கைது
/
வாலிபரை கொல்ல முயன்ற கள்ளக்காதலி கைது
ADDED : டிச 23, 2025 06:48 AM
பெங்களூரு: கள்ளக்காதலை கைவிட்ட ஆத்திரத்தில், வாலிபரை கொல்ல முயன்ற வழக்கில் கள்ளக்காதலி உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூர் தாலுகா, புட்டய்ய அக்ரஹாரா கிராமத்தில் வசிப்பவர் தீபா, 40. திருமணம் ஆன இவருக்கும், திருமணம் ஆகாத கார்த்திக், 29 என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டனர்.
கள்ளக்காதல் விவகாரம் கார்த்திக் குடும்பத்திற்கு தெரிந்தது; அவர்கள் கண்டித்தனர். இதனால் கள்ளக்காதலை, கார்த்திக் கைவிட்டார். இதை ஏற்காத தீபா, தன்னுடன் தொடர்ந்து உறவில் இருக்கும்படி கார்த்திக்கை நச்சரித்தார். இதற்கு கார்த்திக் மறுத்து விட்டார்.
கோபம் அடைந்த தீபா, கார்த்திக்கை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். தனக்கு தெரிந்த இரு வாலிபர்களுடன் சேர்ந்து , கடந்த 13 ம் தேதி கார்த்திக்கை அரிவாள், கத்தி, இரும்பு கம்பியால் தீபா தாக்கினார். இந்த கொலைவெறி தாக்குதலில் படுகாயம் அடைந்த கார்த்திக், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இத்தாக்குதல் குறித்து கார்த்திக்கின் பெற்றோர் அளித்த புகாரில், தீபா உட்பட மூன்று பேர் மீது தொட்டபெலவங்கலா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த மூன்று பேரும், நேற்று காலையில் தேவனஹள்ளியில் கைது செய்யப்பட்டனர்.

