தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/அரிசியை பதுக்குவோர் மீது நடவடிக்கை: 17 லட்சம் கிலோ ரேஷன் பொருள் பறிமுதல்

அரிசியை பதுக்குவோர் மீது நடவடிக்கை: 17 லட்சம் கிலோ ரேஷன் பொருள் பறிமுதல்

அரிசியை பதுக்குவோர் மீது நடவடிக்கை: 17 லட்சம் கிலோ ரேஷன் பொருள் பறிமுதல்


UPDATED : அக் 31, 2026 12:00 AM

ADDED : அக் 30, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 12:00 AM ADDED : அக் 30, 2026 11:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: அரிசியை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்க முயற்சித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த மூன்று மாதங்களில், பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய உணவுத்துறை அதிகாரிகள், 17.78 லட்சம் கிலோ ரேஷன் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

உணவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

உணவுத்துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத்தின் உத்தரவுபடி, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, தீவிர நடவடிக்கை எடுத்துள்ளோம். நடப்பாண்டு ஆகஸ்ட் முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், அதிரடி சோதனை நடத்தினோம்.

கிடங்குகளில் சோதனை நடத்தி அரிசி, கேழ்வரகு, கோதுமை உட்பட, 17.78 லட்சம் கிலோ ரேஷன் பொருட்கள் பறிமுதல் செய்துள்ளோம்.

பெலகாவி மாவட்டத்தில் மட்டுமே ஐந்து லட்சம் கிலோவுக்கும் அதிகமான ரேஷன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோலார் மாவட்டத்தில், 3.5 லட்சம் கிலோ, பாகல்கோட் மற்றும் விஜயபுராவில் தலா ஒரு லட்சம் கிலோவுக்கும் அதிகமான தானியங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தானியங்களை பதுக்கியது தொடர்பாக, மாநிலத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் 238 வழக்குகள் பதிவாகியுள்ளன. 215 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us