பெங்களூரு – மும்பை வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் நாளை துவக்கம்
பெங்களூரு – மும்பை வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் நாளை துவக்கம்
UPDATED : அக் 31, 2026 12:00 AM
ADDED : அக் 30, 2026 10:54 PM
பெங்களூரு: ‘பெங்களூரு – மும்பை வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட அறிமுக ரயில், எஸ்.எம்.வி.டி.,யில் இருந்து நாளை (நவ., 1ம் தேதி) புறப்படுகிறது’ என தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
எஸ்.எம்.வி.டி., பெங்களூரு – மும்பை வந்தே பாரத் அறிமுக ரயில் எண் 06503, நவ., 1ம் தேதி மதியம் 12:15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:15 மணிக்கு மும்பை சென்றடைகிறது. இந்த ரயிலை, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாளை (நவ., 1ம் தேதி) கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
அதன் பின், நவ., 3ம் தேதி முதல் ரயில் எண் 27652: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு – மும்பை வந்தே பாரத் படுக்கை வசதி ரயில், திங்கட்கிழமையை தவிர்த்து, மற்ற நாட்களில் எஸ்.எம்.வி.டி., பெங்களூரில் இருந்து இரவு 7:45 மணிக்கு புறப்பட்டு, அனந்த்பூருக்கு 10:28க்கும்; குன்டக்கல்லுக்கு 11:20க்கும்; ராய்ச்சூருக்கு அதிகாலை 1:03க்கும்; யாத்கிருக்கு 1:43க்கும்; கலபுரகிக்கு 3:08க்கும்; சோலாபூருக்கு 4:20க்கும்; புனேக்கு 8:00 க்கும்; கல்யாண் சந்திப்புக்கு 10:42க்கும்; சத்ரபதி சிவாஜி மஹராஜ் முனையத்துக்கு 11:55 மணிக்கும் சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் எண் 27651: மும்பை – எஸ்.எம்.வி.டி., பெங்களூரு வந்தே பாரத் படுக்கை வசதி ரயில், நவ., 2ம் தேதி முதல் செவ்வாய் கிழமை தவிர, மற்ற நாட்களில் மும்பையில் இருந்து இரவு 8:10 மணிக்கு புறப்பட்டு, கல்யாணில் 8:48க்கும்; புனேவுக்கு 11:40க்கும்; சோலாபூருக்கு 3:00க்கும்; கலபுரகிக்கு 4:13க்கும்; யாத்கிருக்கு 5:08 க்கும்; ராய்ச்சூருக்கு 6:03 க்கும்; குன்டக்கல்லுக்கு 7:30க்கும்; அனந்தபூருக்கு 8:38 க்கும், எஸ்.எம்.வி.டி., பெங்களூரு மதியம் 12:00 மணிக்கு வந்தடையும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது.
