தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பூங்காக்களில் நிகழ்ச்சி நடத்த சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

 பூங்காக்களில் நிகழ்ச்சி நடத்த சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

 பூங்காக்களில் நிகழ்ச்சி நடத்த சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு


ADDED : ஆக 22, 2026 11:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 11:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பூங்காக்களில் நிகழ்ச்சிகள் நடத்தும் மாநில அரசின் முடிவுக்கு, சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

கர்நாடகாவில் உள்ள அரசு பூங்காக்களில், 5 சதவீத இடத்தை பொது பயன்பாட்டிற்கு அனுமதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, பூங்காக்களில் உள்ள 5 சதவீத இடத்தில் அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த பயன்படுத்தப்படும். இதற்காக, கர்நாடக அரசு பூங்காக்கள் பாதுகாப்பு சட்டம் 1975ல் திருத்தம் செய்ய, அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. சட்டசபையில் வரும் நாட்களில் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

இதற்கு சமூகஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

'பூங்கா நிலங்களை குத்தகை விடுவது, நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுசரியல்ல. இது, பூங்காக்களின் பசுமையை பாதிக்கும். தற்போது, 5 சதவீதம் இடம் அனுமதிக்கப்படுகிறது.

'வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும். பெங்களூரில் உள்ள பூங்காக்கள் வணிகமயமாக்க அனுமதிக்கக் கூடாது. இந்த மசோதா கண்டிப்பாக தாக்கல் செய்யப்படக்கூடாது' என, சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us