அப்ரூவராக மாறிய பிரதோஷ் நடிகர் தர்ஷனுக்கு தலைவலி
அப்ரூவராக மாறிய பிரதோஷ் நடிகர் தர்ஷனுக்கு தலைவலி
ADDED : ஆக 26, 2026 02:50 AM

அ நிறம் | அளவு
பெங்களூரு: சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், பிரதோஷின் அப்ரூவர் மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இது, நடிகர் தர்ஷனுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரகவுடா உட்பட, 17 பேர் சிறையில் உள்ளனர். இவர்களில் ஒருவரான பிரதோஷ் அப்ரூவராக மாற முடிவெடுத்தார். இதற்கு அனுமதி அளிக்குமாறு, 59வது சிட்டி சிவில் கோர்ட்டில் மனு அளித்தார்.
இம்மனுவின் மீதான விசாரணை நேற்று நடந்தது. பிரதோஷின் மனுவை, நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
அவரை அரசு தரப்பு சாட்சியாக அறிவித்தது. அதே சமயம், ஏதேனும் உண்மையை மறைத்தால், மீண்டும் குற்றவாளியாக பிரதோஷ் மாற்றப்படுவார் என எச்சரித்தது.
இந்த உத்தரவு, இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான தர்ஷனுக்கு தலைவலியாக மாறி உள்ளது.
