தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அரசியல் புல் அவுட்

 அரசியல் புல் அவுட்

 அரசியல் புல் அவுட்


ADDED : ஆக 26, 2026 02:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 02:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊழலை ஊக்குவிக்கும் காங்.,

தனது அமைச்சர் பதவியை நாகேந்திரா ராஜினாமா செய்ய வேண்டும். இதற்கான முழக்கங்களை மேல்சபையில் எழுப்பினோம். இவ்விவகாரத்தை மக்களிடம் கொண்டு செல்வோம். நாகேந்திராவை சி.பி.ஐ.,யும், அமலாக்கத்துறையும் குற்றவாளி என அறிவித்தது. ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவர், அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதிலிருந்து காங்கிரஸ் ஊழலை ஊக்குவிக்கிறது என்பது தெரிகிறது.

நிரந்தர வசிப்பிட சான்றிதழ்களை பயன்படுத்தி, சில போலி வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது. இவ்விஷயத்தில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

போலியான, சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தால் அவர்களின் பெயரை நீக்க வேண்டும். பெங்களூரில் 45 சதவீதத்திற்கு மேலானோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. எனவே, ஜாக்கிரதையாக பணிகள் நடக்க வேண்டும்.

- சி.டி.ரவி, எம்.எல்.சி., - பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us