/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குண்டர்களை ஏவி தாக்கினார்; மனைவி மீது நடிகர் தனுஷ் ராஜ் புகார்
/
குண்டர்களை ஏவி தாக்கினார்; மனைவி மீது நடிகர் தனுஷ் ராஜ் புகார்
குண்டர்களை ஏவி தாக்கினார்; மனைவி மீது நடிகர் தனுஷ் ராஜ் புகார்
குண்டர்களை ஏவி தாக்கினார்; மனைவி மீது நடிகர் தனுஷ் ராஜ் புகார்
ADDED : ஜன 08, 2026 05:53 AM

பெங்களூரு: கன்னட நடிகர் தனுஷ் ராஜ், தன்னை மனைவி குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்துவதாகவும், தற்கொலை செய்து கொள்வதாகவும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
கன்னடத்தில், சிவாஜி சுரத்கல் உட்பட, பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகர் தனுஷ் ராஜ், 30. இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். ஒன்பது மாதங்களுக்கு முன், இவருக்கும், அஷ்ரிதா, 25, என்பவருக்கும் திருமணம் நடந்தது.
தனுஷ் ராஜ் நடிகர் என்பதால், அவர் மீது மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் எங்கு சென்றாலும் சந்தேக கண்ணோடு பார்ப்பதுடன், குண்டர்களை ஏவி கணவரை தாக்கியதாக கூறப்படுகிறது. நேற்று கிரிநகர் போலீஸ் நிலையத்துக்கு வந்த தனுஷ்ராஜ், மனைவி மீது புகார் அளித்தார்.
அதில், 'என் மீது மனைவி எப்போதும் சந்தேகப்படுகிறார். நான் யாருடனோ கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக குற்றம்சாட்டுகிறார். குளியலறையின் கண்ணாடியை உடைத்து, தன் கையை அறுத்து கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுகிறார்.
பணி நிமித்தமாக வெளிநாடு சென்ற நான், சமீபத்தில் பெங்களூருக்கு திரும்பினேன். நான் பொய் சொல்லிவிட்டு, வேறு பெண்ணுடன் வெளிநாடு சென்றதாக கூறி, என்னை அடித்து கொடுமைப்படுத்துகிறார். குண்டர்களுடன் சேர்ந்து தாக்கியதுடன், கொலை செய்வதாக மிரட்டுகிறார்' என, தெரிவித்துள்ளார்.
மனைவி அஷ்ரிதாவும், தெற்கு மண்டல மகளிர் போலீஸ் நிலையத்தில், கணவர் மீது பதில் புகார் கொடுத்துள்ளார். அதில், 'என் கணவர் தனுஷ்ராஜ், வரதட்சணை கேட்டு, என்னை தாக்கினார். திருமணத்தின் போது, 50 கிராம் தங்கநகையுடன், 8 லட்சம் ரூபாயும் பெற்றிருந்தார். அவரது மொபைல் போனை ஆய்வு செய்த போது, அவர் இளம் பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பது தெரிந்தது. இதை பற்றி கேள்வி எழுப்பியதால் என்னை தாக்கினார்' என கூறியுள்ளார்.
இருவரின் புகார்கள் குறித்தும், போலீசார் விசாரிக்கின்றனர்.

