/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடிகர் மனு சிறையில் அடைப்பு; பலாத்கார வழக்கில் கைதான நடிகர் மனு சிறையில் அடைப்பு

ADDED : மே 27, 2025 12:35 AM
பெங்களூரு : பலாத்கார வழக்கில் கைதான நடிகர் மதேனுார் மனு சிறையில் அடைக்கப்பட்டார்.
கன்னட நடிகர் மதேனுார் மனு, 'கில்லாடிகளு' என்ற கன்னட நகைச்சுவை நிகழ்ச்சியால் பிரபலம் அடைந்தவர். இவர் மீது கன்னட துணை நடிகை ஒருவர், கடந்த 22ம் தேதி பலாத்கார புகார் கூறினார்.
பெங்களூரு அன்னபூர்னேஸ்வரி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நடிகர் மதேனுார் மனுவை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
போலீஸ் காவல் நேற்று நிறைவு பெற்ற நிலையில், பெங்களூரு மூன்றாவது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு ஆஜர்படுத்தப்பட்டார்.
போலீஸ் தரப்பில் காவல் நீட்டிப்பு கோராததால் மதேனுார் மனுவை 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மதேனுார் மனுவை பரப்பன அக்ரஹாரா சிறையில் போலீசார் அடைத்தனர்.