/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடிகர் பிரகாஷ் ராஜ் வழக்கு மார்ச் 4க்கு ஒத்திவைப்பு
/
நடிகர் பிரகாஷ் ராஜ் வழக்கு மார்ச் 4க்கு ஒத்திவைப்பு
நடிகர் பிரகாஷ் ராஜ் வழக்கு மார்ச் 4க்கு ஒத்திவைப்பு
நடிகர் பிரகாஷ் ராஜ் வழக்கு மார்ச் 4க்கு ஒத்திவைப்பு
ADDED : பிப் 18, 2025 06:15 AM

பெங்களூரு: கும்பமேளாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் புனித நீராடுவது போன்று, தன் 'எக்ஸ்' பதிவில் பதிவிட்ட பிரசாந்த் சம்பரகி மீதான விசாரணைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், பிராயக்ராஜ்ஜில் மஹா கும்ப மேளா நடந்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
ஹிந்து ஆதரவு பிரமுகர் பிரசாந்த் சம்பரகி, தன் 'எக்ஸ்' பக்கத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ், புனித நீராடுவது போன்று படத்தை வெளியிட்டிருந்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரகாஷ் ராஜ், மைசூரு லட்சுமிபுரம் போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசாரும் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இதற்கிடையில், தன் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு தடை விதிக்கும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பிரசாந்த் சம்பரகி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
நேற்று இம்மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், பிரசாந்த் சம்பர்கியிடம் விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்தார்.
அத்துடன், இது தொடர்பாக பிரகாஷ் ராஜ், லட்சுமிபுரம் போலீசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட அவர், விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

