தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/தர்ஷன் மனைவி மிரட்டல் விடுத்ததாக நடிகர் தன்வீர் தந்தை திடீர் புகார்

தர்ஷன் மனைவி மிரட்டல் விடுத்ததாக நடிகர் தன்வீர் தந்தை திடீர் புகார்

தர்ஷன் மனைவி மிரட்டல் விடுத்ததாக நடிகர் தன்வீர் தந்தை திடீர் புகார்


UPDATED : அக் 26, 2026 12:00 AM

ADDED : அக் 25, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 12:00 AM ADDED : அக் 25, 2026 10:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: நடிகர் தர்ஷன் வழக்கு தொடர்பான விஷயத்தில், 10 கோடி ரூபாய் வாங்கி, நடிகர் தன்வீர் ஏமாற்றியதாக, ஆர்.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் தர்ஷன் மனைவி விஜயலட்சுமி புகார் அளித்துள்ள நிலையில், தங்களுக்கு மிரட்டல் விடுத்ததாக, தன்வீர் தந்தை புகார் அளித்து உள்ளார்.

சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் சிறையில் இருக்கும் நிலையில், அவரது வழக்கு தொடர்பாக, அவரது மனைவி விஜயலட்சுமியிடம் இருந்து, 10 கோடி ரூபாய் வரை, நடிகர் தன்வீர் கவுடா பெற்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விஜயலட்சுமிக்கும், தன்வீருக்கும் இடையே அவ்வப்போது வார்த்தை மோதல் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், விஜயலட்சுமியின் மேலாளர் நாகராஜ், ராஜராஜேஸ்வரி நகர் போலீசில், தன்வீர் மீது புகார் அளித்து உள்ளார். மேலும் தொலைபேசி உரையாடல் பதிவையும் வழங்கி உள்ளார். அதில், தர்ஷன், அவரது மனைவி விஜயலட்சுமியை தன்வீர் திட்டியது குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, தன்வீர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விரைவில் தன்வீரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டிருந்தனர். அதற்குள், தன்வீரின் தந்தை திம்மே கவுடா, புகார் அளித்துள்ளார்.

அதில் கூறியுள்ளதாவது:

கடந்த 21ம் தேதி இரவு எங்கள் வீட்டுக்கு விஜயலட்சுமி, அவரது மேலாளர் நாகராஜ் வந்தனர். அப்போது எங்கள் வீட்டினுள், எனது உறவினர் அஜய் கவுடா இருந்தார். அவரை ரவுடி என தவறாக நினைத்த நாகராஜ், சத்தம் போட துவங்கினார்.

அத்துடன், விஜயலட்சுமி, கவுரவ் ஷெட்டி என்பவருக்கு போன் செய்து, போஜா, பாட்டில் பிரமோத் ஆகியோரை இங்கு அனுப்பும்படி கூறினார். சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் வந்தனர்.

அவர்களிடம் நீங்கள் யார் என கேட்டபோது, பாட்டில் பிரமோத் என்பவர், தான் விஜயலட்சுமியின் சகோதரன் என்று கூறினார்.

அப்போது என் மகன் தன்வீர் குறித்து மிரட்டல் தொனியில் பேசினர். ‘நீங்கள் வெளியே செல்லவில்லை என்றால் போலீசுக்கு போன் செய்வேன்’ என்று கூறியதும், அவர்கள் அனைவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us