/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடிகர் வினோத் பிரபாகர் மந்த்ராலயாவில் உருளு சேவை
/
நடிகர் வினோத் பிரபாகர் மந்த்ராலயாவில் உருளு சேவை
ADDED : மே 28, 2025 12:13 AM

தான் நடித்த திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என, நடிகர் வினோத் பிரபாகர், மந்த்ராலயாவின் ராகவேந்திரா மடத்தில் உருளு சேவை செய்தார்.
கன்னடத்தில் தயாராகும் 'மாதேவா' திரைப்படத்தில் நடிகர் வினோத் பிரபாகர் நாயகனாக நடித்துள்ளார்.
படத்தின் வெற்றிக்காக வினோத் பிரபாகர் உட்பட, படக்குழுவினர் கோவில், கோவிலாக சென்று பிரார்த்தனை செய்கின்றனர். அதேபோன்று, ஆந்திராவின் மந்த்ராலயாவின் ராகவேந்திர சுவாமி கோவிலுக்கு சென்று, வேண்டுதல் வைத்தனர்.
நடிகர் வினோத் பிரபாகர் உருளு சேவை செய்தார். அங்கு சுவாமியை தரிசனம் செய்து, ராய்ச்சூரின், காந்தி சதுக்கத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்தனர். அங்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
பின் நடிகர் வினோத் பிரபாகர் அளித்த பேட்டி:
எனக்கும், என் தந்தை பிரபாகருக்கும், வட மாவட்டங்களில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். எங்களுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனர்.
தற்போது மந்த்ராலயாவுக்கு சென்று, ராகவேந்திரரை தரிசனம் செய்து, ஆசி பெற்றேன்.
ஜூன் 6ம் தேதி, எங்களின் 'மாதேவா' திரைப்படம் திரைக்கு வருகிறது. படம் வெற்றியடைய வேண்டும் என, வேண்டினோம். என் நீண்ட நாள் விருப்பமான ராகவேந்திரர் கோவிலில் உருளுசேவை செய்தேன். படத்தை பற்றி பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளோம்.
கர்நாடகாவின் நந்தினி பாலுக்கு, நடிகர் புனித் ராஜ்குமார் பிராண்ட் அம்பாசிடராக இருந்தார்.
அதே போன்று மைசூரு சாண்டல் சோப்புக்கும், கன்னடரை பிராண்ட் அம்பாசிடராக்க வேண்டும் என, திரையுலகினர் வலியுறுத்துகின்றனர். எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என, நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -