தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகருக்கு போன் செய்து ஆறுதல் கூறிய நடிகர் யஷ்

 புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகருக்கு போன் செய்து ஆறுதல் கூறிய நடிகர் யஷ்

 புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகருக்கு போன் செய்து ஆறுதல் கூறிய நடிகர் யஷ்


ADDED : ஜூன் 03, 2026 10:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 10:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: மலக்குடல் புற்று நோயால் அவதிப்படும் தன் ரசிகருக்கு, நடிகர் யஷ், 'வீடியோ கால்' செய்து, தைரியமூட்டினார்.

ஷிவமொக்கா மாவட்டத்தை சேர்ந்தவர் சுனில்குமார், 30. இவர், நடிகர் யஷ்ஷின் தீவிர ரசிகர். தற்போது ஷிவமொக்காவின் யஷ் ரசிகர் மன்ற தலைவராக இருக்கிறார்.

யஷ் நடித்த திரைப்படங்கள் வெளியானால், திரையரங்குகளை அலங்கரிப்பது, கட் - அவுட் வைப்பது போன்ற அனைத்து பணிகளையும் செய்வார்.

ஆனால், சில மாதங்களாக, மலக்குடல் புற்று நோயால் அவதிப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து படப்பிடிப்பில் நடிகர் யஷ் பங்கேற்பதால், தன் ரசிகருடன், அவரால் பேச முடியவில்லை.

நேற்று காலை, ரசிகர் சுனில்குமாரை, நடிகர் யஷ் வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டார். 'புற்றுநோய் எப்படி வந்தது; தற்போது எந்த கட்டத்தில் உள்ளது' என்ற தகவலை கேட்டறிந்தார்.

அதன் பின், 'நோயை கண்டு பயப்படாதீர்கள். உங்களுடன் நாங்கள் இருக்கிறோம். சிகிச்சைக்கு ஒத்துழையுங்கள். விரைவில் குணமடைவீர்கள்' என, தைரியம் கூறினார்.

சுனில்குமாரும், 'உங்களின், 'டாக்சிக்' திரைப்படம் எப்போது திரைக்கு வரும்' என, ஆர்வமாக கேட்டார். அப்போது யஷ், 'பட வேலைகளை விட்டு விடுங்கள். சினிமா வரும், போகும். உங்கள் வாழ்க்கையை பாருங்கள். என் ரசிகர்களிடம் நான் எப்போதும் இதைத்தான் கூறுகிறேன். நம்பிக்கையோடு சிகிச்சை பெறுங்கள்' என, அறிவுறுத்தினார்.

தனக்கு பிடித்தமான நடிகர், வீடியோ கால் செய்து பேசியதால், சுனில்குமார் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us