/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு: நடிகர் யஷ் தாயார் மீது குற்றச்சாட்டு
/
ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு: நடிகர் யஷ் தாயார் மீது குற்றச்சாட்டு
ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு: நடிகர் யஷ் தாயார் மீது குற்றச்சாட்டு
ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு: நடிகர் யஷ் தாயார் மீது குற்றச்சாட்டு
ADDED : செப் 17, 2025 07:45 AM

பெங்களூரு : நடிகர் யஷ்ஷின் தாயும், தயாரிப்பாளருமான புஷ்பா அருண் குமார், தன் படத்தில் நடித்த துணை கலைஞர்களுக்கு ஊதியம் கொடுக்காமல் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கன்னடத்தின் பிரபல நடிகர் யஷ்ஷின் தாய் புஷ்பா அருண்குமார், சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளார். இதன் மூலமாக 'கொத்தலவாடி' என்ற திரைப்படத்தை தயாரித்தார். ஆகஸ்ட் 1ம் தேதி, படம் வெளியானது. படம் வெற்றி பெறவில்லை என்று கூறப்படுகிறது.
தயாரிப்புடன் நிற்காமல், திரைப்படங்களை புஷ்பா விநியோகித்தும் வருகிறார். தெலுங்கில் அனுஷ்கா நடித்த திரைப்படத்தை, மாநிலத்தில் விநியோகித்தார். அதுவும் குறிப்பிடும்படி லாபத்தை கொடுக்கவில்லை.
இதற்கிடையே, 'கொத்தலவாடி' திரைப்படத்தில் நடித்த துணை கலைஞர்களுக்கு, ஊதியம் வழங்காமல் புஷ்பா இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, நடிகை சுவர்ணாவின் தாய் மற்றும் பட இயக்குநர் ஸ்ரீராஜ் இடையே நடந்த ஆடியோ உரையாடல், நேற்று வெளியாகியுள்ளது.
நடிகையின் தாய், 'உங்கள் படத்தில் நடித்த என் மகளுக்கு, ஊதியம் கொடுக்க முடியாதா? படத்துக்காக என் மகள் மூன்று மாதங்கள் பணியாற்றினார். எனக்கு கணவர் இல்லை. மகள் தான் என்னை பார்த்துக் கொள்கிறார். இன்று காலை முதல், என் மகள் சாப்பிடாமல் வருத்தத்தில் இருக்கிறார்' என, தெரிவித்துள்ளார்.
சுவர்ணாவுக்கு மட்டுமின்றி, மகேஷ் உட்பட, சில நடிகர், நடிகையருக்கும் ஊதியம் வழங்கவில்லை என, கூறப்படுகிறது. தன் படத்தில் வேலை வாங்கிக் கொண்டு, ஊதியம் தராமல் இழுத்தடிப்பது சரியல்ல என, பலரும் கண்டித்துள்ளனர்.