தங்கம் கடத்தலில் கைதான நடிகை ரன்யா ராவ் ஜாமினில் விடுதலை
தங்கம் கடத்தலில் கைதான நடிகை ரன்யா ராவ் ஜாமினில் விடுதலை
ADDED : ஏப் 23, 2026 04:22 AM

பெங்களூரு: தங்கம் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ் உட்பட 3 பேர், சிறையில் இருந்து, ஜாமினில் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
கன்னட திரை உலகில் இளம் நடிகை ரன்யா ராவ், 34. இவர், கர்நாடகா மூ த்த ஐ.பி.எஸ்., அதிகாரி ராமசந்திர ராவ் வளர்ப்பு மகள் ஆவார்.
கடந்த ஆண்டு மார்ச் 3 ம் தேதி துபாயில் இருந்து பெங்களூருக்கு 12.56 கோடி ரூபாய் மதிப்பிலான 14.20 கிலோ தங்க கட்டிகள் கடத்தி வந்த ரன்யாவை, விமான நிலையத்தில் வைத்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
ரன்யா கொடுத்த தகவல் அடிப்படையில் அவரது முன்னாள் காதலனும், தெலுங்கு நடிகருமான தருண் கொண்டாரு ராஜு, பல்லாரி நகைக்கடை உரிமையாளர் ஷாகில் ஜெயின் கைது செய்யப்பட்டனர்.
காபிபோசா மூன்று பேரும் விசாரணைக்கு பின், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக் கப்பட்டனர். சட்டவிரோத பணபரிமாற்றமும் நடந்தது தெரிய வந்ததால், அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது.
ரன்யா உட்பட 3 பேரும் சேர்ந்து 1 00 கிலோ தங்கத்தை, துபாயில் இருந்து கடத்தியது விசாரணையில் தெரிந்தது. ரன்யாவுக்கு சொந்தமான 34.12 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டன.
இவர்கள் 3 பேரும் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தால், சாட்சிகளை அழிந்து விடுவர் என்று கருதிய, வருவாய் புலனாய்வு அதிகாரிகள், மூன்று பேரும் ஓராண்டு சிறையில் இருந்து வெளி வருவதை தடுக்கும் வகையில், 'காபிபோசா' சட்டத்தை அமல்படுத்தினர்.
இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பின், ஜாமின் கேட்டு ரன்யா தாக்கல் செய்த மனுவை விசாரித்த, பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் ரன்யாவுக்கு ஜாமின் வழங்கியது. ஆனால் காபிபோசா சட்டம் அமலில் இருந்ததால் அவரால் வெளியே வர முடியவில்லை.
வக்கீல்கள் கார் இந்நிலையில் ரன்யா உட்பட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு, நேற்றுடன் ஓராண்டு ஆனது. இதனால் 3 பேரும் ஜாமின் கேட்டு மீண்டும், பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு மனு செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி விஸ்வநாத் கவுடர், நேற்று காலை 3 பேருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.
உத்தரவின் நகலுடன் சிறைக்கு சென்ற வக்கீல்கள், சிறை அதிகாரிகளிடம் காண்பித்தனர். பின், சிறையில் இருந்து ரன்யா, தருண், ஷாகில் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். ஊடகங்கள் கண்ணில் படாமல் இருக்க, வக்கீல்கள் காரில் மூன்று பேரும் சென்றனர்.
ஓராண்டு சிறை தண்டனைக்கு பின் வெளியே வந்து உள்ள ரன்யா உட்பட 3 பேரும், விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.
