நந்தினி உற்பத்திகளுக்கு நடிகை சுதாராணி துாதராக நியமனம்
நந்தினி உற்பத்திகளுக்கு நடிகை சுதாராணி துாதராக நியமனம்
ADDED : பிப் 13, 2026 05:30 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: பெங்களூரு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவின், நந்தினி உற்பத்திகளுக்கு நடிகை சுதாராணியை துாதராக நியமித்ததற்கு, கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
பெங்களூரு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், கே.எம்.எப்., நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வராமல், தன்னிச்சையாக முடிவு செய்து, நடிகை சுதாராணியை துாதராக நியமித்துள்ளது. இது, கே.எம்.எப்., சட்டத்துக்கு எதிரானதானது என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கே.எம்.எப்., அதிகாரிகள் கூறுகையில், ''துாதரை நியமிப்பதற்கு முன், எங்களுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், பெங்களூரு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் அதிகாரிகள் அப்படி செய்யவில்லை. அவர்களிடம் விளக்கம் கேட்போம்,'' என்றனர்.
