தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ புதிய நண்பரை மணப்பதற்காக பழைய காதலரை கொன்ற நடிகை

 புதிய நண்பரை மணப்பதற்காக பழைய காதலரை கொன்ற நடிகை

 புதிய நண்பரை மணப்பதற்காக பழைய காதலரை கொன்ற நடிகை


ADDED : மார் 03, 2026 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 06:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகல்குன்டே: புதிய காதலரை மணப்பதற்காக, பழைய காதலரை கொடூரமாக கொலை செய்த கன்னட நடிகை உட்பட, மூவர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு பாகல்குன்டேவின் விஜயலட்சுமி லே - அவுட்டில், பூட்டப்பட்ட வீடு ஒன்றில், இரண்டு நாட்களுக்கு முன் துர்நாற்றம் வீசியது. இதனால், அப்பகுதியினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு வந்த பாகல்குன்டே போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ஒருவர் வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டு கொலையாகி கிடந்தது தெரிந்தது.

உடலை மீட்ட போலீசார் விசாரணையில் இறங்கினர். கொலையான நபர் மோகன் கிருஷ்ணா, 45, என்பதை கண்டுபிடித்தனர். இவரை கொலை செய்து விட்டு தப்பிய காதலி உட்பட, மூவரை கைது செய்தனர்.

ஹாசனை சேர்ந்த மோகன் கிருஷ்ணா, பெங்களூரில் சிறிய அளவில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். திருமணமான இவருக்கு, கன்னட திரைப்பட துணை நடிகையான ஊர்வசி என்ற பிந்து, 30, அறிமுகமானார். அவரும் திருமணமாகி கணவரை பிரிந்தவர். கன்னடத்தில் திரைக்கு வந்த, பஜ்ரங்கி, போலீஸ் குவாட்ரஸ், காலபைரவா உட்பட, சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

நடிகை பிந்து உடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால், மோகன் கிருஷ்ணா தன் மனைவியை விட்டு விட்டு, பிந்துவுடன் சேர்ந்து வாழ்ந்தார். பாகல்குன்டேவின், விஜயலட்சுமி லே - அவுட்டில், நடராஜ் என்பவரின் வீட்டில் சமீபத்தில் வாடகைக்கு குடிவந்தனர்.

இதற்கிடையே, பிந்துவுக்கு, ஓட்டுநராக பணியாற்றும் வினய், 30, என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர்.

இதையறிந்த மோகன் கிருஷ்ணா, பிந்துவுடன் தகராறு செய்தார். அதனால், மோகன் கிருஷ்ணாவை கொலை செய்ய பிந்து சதி திட்டம் தீட்டினார்.

கடந்த மாதம், 18ம் தேதியன்று, பார்ட்டி நடத்தலாம் எனக்கூறி வினய் மற்றும் அவரது நண்பர் தனுஷ், 29, ஆகியோரை பிந்து தன் வீட்டுக்கு வரவழைத்தார். மோகன் கிருஷ்ணாவை அளவுக்கு அதிகமாக குடிக்க வைத்தனர்.

இந்த வேளையில் அவர், பிந்துவை பலாத்காரம் செய்ய முயற்சித்தார். இதைக்கண்டு கோபமடைந்த வினய், ஏற்கனவே கொண்டு வந்த கத்தியால் மோகன் கிருஷ்ணாவை சரமாரியாக குத்தினார். அவர் அலறியதால் மூவரும் சேர்ந்து, அவரது வாய், மூக்கை சேர்த்து டேப் சுற்றி, மூச்சு திணற வைத்து கொலை செய்தனர்.

அதன்பின் வீட்டை பூட்டி கொண்டு தப்பியோடி விட்டனர். விசாரணை நடத்திய போலீசார், பிந்து, வினய், தனுஷ் ஆகியோரை கண்டுபிடித்து விசாரித்த போது, நடந்ததை விவரித்தனர். மூவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us