தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மனைவியை வெட்டிய போதை கணவர் கைது

மனைவியை வெட்டிய போதை கணவர் கைது

மனைவியை வெட்டிய போதை கணவர் கைது


UPDATED : அக் 17, 2026 12:00 AM

ADDED : அக் 16, 2026 09:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 12:00 AM ADDED : அக் 16, 2026 09:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

துமகூரு: குடிபோதையில், மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டார்.

துமகூரு மாவட்டம், சிக்கநாயகனஹள்ளி தாலுகா, ஹுளியாரு அருகில் உள்ள லக்கேனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் நாகராஜ், 35. இவரது மனைவி பவித்ரா, 33.

துமகூரின், எஸ்.எஸ்.புரம் அருகில், நாகராஜ் இளநீர் வியாபாரம் செய்கிறார். இவருக்கு குடிப் பழக்கம் இருந்ததால், தம்பதிக்கிடையே அவ்வப்போது தகராறு நடப்பது வழக்கம்.

நேற்று காலை நாகராஜ் குடிபோதையில் வந்ததால், தம்பதிக்கு இடையே வாக்குவாதம் நடந்தது. அப்போது கோபமடைந்த நாகராஜ், அரிவாளால் கழுத்து, கை உள்ளிட்ட பாகங்களில் வெட்டனார்.

காயமடைந்த பவித்ராவை மீட்டு, அப்பகுதியினர் மருத்துவமனையில் சேர்த்து, போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். பவித்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு வந்த துமகூரு நகர் போலீசார், நாகராஜை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us