/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தொடர் விடுமுறைக்கு கூடுதல் பஸ்கள்
/
தொடர் விடுமுறைக்கு கூடுதல் பஸ்கள்
ADDED : ஜன 23, 2026 06:06 AM
பெங்களூரு: குடியரசு தினம் வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது.
நாளை ஜன.,24ம் தேதி நான்காம் சனிக்கிழமை, ஜனவரி 25 ஞாயிறு, மறுநாள் 26ம் தேதி குடி யரசு தினம் வருகிறது. தொடர்ச்சியாக வி டுமுறை கிடைத்துள்ளதால், பெங்களூரில் வசிக்கும் பலர், குடும்பத்துடன், நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டம் வகுத்துள்ளனர்.
பயணியர் நெருக்கடியை மனதில் கொண்டு, கூடுதல் பஸ்கள் இயக்க கே.எஸ்.ஆர்.டி.சி., மற்றும் பி.எம்.டி.சி., முன் வந்துள்ளன. இன்று பெங்களூரில் இருந்து, பல்வேறு மாவட்டங்களுக்கு , பி.எம்.டி.சி., 265 கூடுதல் பஸ்களும், நாளை 500 கூடுதல் பஸ்களும் இயக்குகிறது. அதே போன்று, பயணியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கே.எஸ்.ஆர்.டி.சி.,யும் கூடுதல் பஸ்களை இயக்கவுள்ளது.

