ADDED : மே 25, 2026 10:29 PM

அ நிறம் | அளவு
பெங்களூரு: கர்நாடக திட்டம் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சராக இருந்தவர் டி.சுதாகர், 65. கடந்த 10ம் தேதி மரணம் அடைந்தார். இதனால் அவர் வகித்த திட்டம் மற்றும் புள்ளியியல் துறை முதல்வர் சித்தராமையா வசம் சென்றது.
ஏற்கனவே அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள் முதல்வர் கையில் இருப்பதால், நிர்வாக காரணங்களுக்காக திட்டம் மற்றும் புள்ளியில் துறையை, கால்நடை துறை அமைச்சர் வெங்கடேஷுக்கு கூடுதலாக ஒப்படைக்க அனுமதிக்கும்படி கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், அரசு அனுமதி கேட்டு இருந்தது.
இதற்கு கவர்னர் நேற்று அனுமதி அளித்தார். திட்டம் மற்றும் புள்ளியியல் துறையை வெங்கடேஷுக்கு கூடுதலாக ஒதுக்கி, அரசின் நிர்வாக பணியாளர் மற்றும் சீர்திருத்த துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
