/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'பிங்க் லைன்' மெட்ரோவுக்கு கூடுதல் ரயில் பெட்டிகள்
/
'பிங்க் லைன்' மெட்ரோவுக்கு கூடுதல் ரயில் பெட்டிகள்
'பிங்க் லைன்' மெட்ரோவுக்கு கூடுதல் ரயில் பெட்டிகள்
'பிங்க் லைன்' மெட்ரோவுக்கு கூடுதல் ரயில் பெட்டிகள்
ADDED : ஏப் 29, 2025 06:29 AM

பெங்களூரு: ரயில் பெட்டி பற்றாக்குறையை தவிர்க்க, 'பிங்க் லைன்' பாதைக்கு கூடுதலாக 42 ரயில் பெட்டிகளை வழங்கும்படி, பி.இ.எம்.எல்.,லுடன் பெங்களூரு மெட்ரோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுகுறித்து, பெங்களூரு மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது செயல்பட்டு வரும் ஊதா, பச்சை நிற மெட்ரோ ரயில் பாதைகளுக்கு ரயில்கள் பற்றாக்குறை உள்ளது.
பெட்டிகள் இல்லாத காரணத்தால், எலக்ட்ரானிக் சிட்டிக்கு இணைப்பு ஏற்படுத்தும், மஞ்சள் மெட்ரோ பாதையில் வர்த்தக போக்குவரத்து துவக்குவது தாமதமாகிறது.
பிங்க் மெட்ரோ ரயில் பாதையில், வரும் 2026ல், வர்த்தக போக்குவரத்து துவங்க உள்ளது.
இந்த பாதைக்கும் ரயில்கள் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள, மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இப்பாதைக்கு கூடுதல் பெட்டிகள் வாங்க முடிவு செய்துள்ளது. 318 ரயில் பெட்டிகள் வழங்க 2023ல் பி.இ.எம்.எல்.,லுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதற்கு ஜப்பான் இன்டர்நேஷனல் ஏஜென்சி 3,177 கோடி ரூபாய் கடனுதவி வழங்கியது.
இவற்றில் 96 பெட்டிகளை, காளேன அக்ரஹாரா - நாகவரா இடையே இணைப்பு ஏற்படுத்தும் பிங்க் பாதைக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.
தற்போது பெட்டிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், 405 கோடி ரூபாய் செலவில், கூடுதலாக ஏழு பெட்டிகளை சப்ளை செய்யும்படி, பி.இ.எம்.எல்.,லுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்பெட்டிகள் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டவை. ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் திறன் கொண்டவை.
ஆஸ்டேனிடிக் ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்தி, பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு கட்ட குளிர்சாதன வசதி கொண்டிருக்கும்.
பயணியரின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு வசதியான உட்கட்டமைப்பு இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

